மகிழ்ச்சியின் நிறம்

தேவாலயம் ஒன்றில் திருமண விழா நடைபெற்றுக் கொண்டு இருந்தது. அந்த விழாவுக்கு பெண்மணி, தனது கணவரோடு 5 வயது மகனை அழைத்துக்கொண்டு வருகை தந்திருந்தார்.
அந்த சிறுவன், திருமண விழாவில் ஒவ்வொரு விஷயத்தையும் காண்பித்து அதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டுக் கொண்டிருந்தான்.
.
அப்போது சிறுவன், மணமக்கள் வெள்ளைநிற ஆடை அணிந்து இருப்பதை பார்த்து ஏன் வெள்ளை நிற ஆடை என்று கேள்வி கேட்டார். பெண்மணி உடனே வெள்ளை நிறம் மகிழ்ச்சியின் அடையாளம் என்று கூறினார்.

சிறுவன் அடுத்ததாக அப்படி யென்றால் மணமகன் மட்டும் ஏன் கருப்பு நிற கோட் அணிந்திருக்கிறார் என்று கேட்டான். உடனே அந்த பெண்மணியின் கணவர், கருப்பு துக்கத்தின் அடையாளம் என்பதால் என்று கூறிவிட்டு, திருமணமானதுமே எல்லா ஆண்களின் நிலையும் இப்படித்தான் என்றார்.

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது