பூமி,வானம்,நிலாவைப் பார்க்கும் நட்சத்திரங்கள்
கிழக்கின் பிரசவ முயற்சி,
சாலைகளில் இருந்தும் பயனிக்காத மரங்கள்
மாதக்கடைசியில் மனைவியின் புன்னகை
சித்திரை மாதத்து மாமரங்களில் தளிர்களில் வழியும்
தாவரத்தங்கம்
சிற்பத்து மங்கையின் செறிந்த மார்பு
நன்றி சொல்லும் ஏழையின் கண்கள்
ராத்திரியில் தூரத்து வெளிச்சம்
வண்டு புணர்ந்தற்காய்ப் பனியில் குளிக்கும் மலர்கள்
உழைப்போர் குடிசையில் உலை கட்டும் நுரை
பெண்ணின் உதடுகள்-முத்தமிடுமுன்
பெண்களின் கண்கள்-முத்தமிட்ட பின்
அதிகாலை நதிநீரில் சூரியத் தகடுகள்
நிலம் நீர் தீவளி வெளி-இவற்றில் எதுவுமே அழகில்லை.
மனம மட்டும் மயானமயிருந்தால். . .
மனம் சுடுகாடாயிருக்கிறதா?
நிலாவில் கூட நெருப்பெரியும்
மனம் நந்தவனமாயிருக்கிறதா
நெருப்பில கூட நிலவொழுகும்.
மனமே அழகு!
நன்றி; கவிஞர் வைரமுத்து (ஆனந்தவிகடன் 8-7-90)
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment