1) நீர்க் குடத்துடன்
நடையில் அவள்
நெளியும் நாணல்!
2) யானைக்கும்
அடி சறுக்கும்
சூரியனுக்கு கிரகணம்.
3) காக்கை கூடு
குயிலுக்கு
அரசுத் தொட்டில்!
4)அரசியல் கட்சிகள் எடுத்தது
மக்கள் தொகை கணக்கு ;
வகுப்பு!
5)பிள்ளைகளுக்கு இனி
சூட்ட முடியாத பெயர்
காவிரி, காவேரி.
6)பயங்கரமான முன்னேற்றம்
கடவுள் படைக்க மனிதன்
கோவிலுக்குள் துப்பாக்கியுடன்.
7)வலது கால் வைத்து வா
மண முறிவில் திரும்ப
எந்தக் கால்.
8)அவளோடு
நெருங்கி அமர
பனிப்புல் சுகம்.
9) ஒரு நெல் மணி
ஜோசியக் கிளிக்கு
உழைப்பிற்கேற்ற கூலி.
10) தாவுகிறது
மரத்திற்கு மரம்
பாலம் கட்டிய குரங்கு.
நன்றி ; கவிஞர் டி.ராஜேந்திரன் (சிவந்த ரேகை )
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment