பாகற்காயை எப்படி செய்தாலும் அதன் கசப்பு சுவைக்காக பலர் விரும்ப மாட்டார்கள். அவர்களையும் பாகற்காய் சாப்பிட வைக்க இந்த பூரணம் வைத்த பாகற்காய்தான் ஒரே வழி. இது ஆந்திராவில் செய்யபப் டும் சமையல் முறை.
எடுத்து வைத்துக் கொள்ள வேண்டியவை
பாகற்காய் - 8
வெங்காயம் - 4
காய்ந்த மிளகாய் - 4
புளித்த மோர் - ஒரு கப்
எண்ணெய் - ஒன்றரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவைகேற்ப
செய்முறை
பாகற்காயினை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
நீளமான பாகற்காயினை குறுக்காக நறுக்கி இரண்டு பாகங்களாக பிரித்து அதனை நீளவாக்கில் ஒரு கீறல் போட்டு உள்ளே உள்ள விதைகளையும், சோற்றினையும் நீக்கி வைக்கவும். (ஒரு பக்கத்தை மட்டும்தான் வெட்ட வேண்டும். இரண்டு துண்டுகளாக பிரித்துவிடக் கூடாது.)
பாத்திரத்தில் புளித்த மோர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து அதனுடன் பாகற்காயை போட்டு வேக விடவும்.
வெங்காயம், காய்ந்த மிளகாயை மிக்சியில் போட்டு ஒன்றும் பாதியுமாக அரைத்து அதனுடன் இஞ்சி, பூண்டு விழுதையும் கலந்து வைத்துக் கொள்ளவும்.
பாகற்காய் வெந்ததும் அதனை எடுத்து மோர் வடியும்படி இறுத்துக் கொள்ளவும்.
பின்னர் கலந்து வைத்துள்ள வெங்காயக் கலவையை பாகற்காயினுள் வைத்து, வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் பாகற்காய்களை அதில் போட்டு மிதமான தீயில் நன்றாக வறுத்து எடுக்கவும்.
மெதுவாக எல்லாப் பக்கமும் திருப்பி விடவும். வேகமாக செய்தால் பாகற்காயின் உள்ளே உள்ள பூரணம் வெளியே வந்து விடும்.
--------------------------------------------------------------------------------------
courtesy:tamil.webdunia.com
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment