சின்ன சின்ன மூக்குத்தி

சின்னச்சின்ன மூக்குத்தியாம்
செகப்புக்கல்லு மூக்குத்தியாம்
கன்னிப் பொண்ணே உன் ஒய்யாரம் கண்டு
கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியா...ம்
கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியாம்- பொண்ணே!
கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியா..ம்

கழுத்தை சுத்தியோர் அட்டியலாம்
உன் கட்டழகே ஒரு பட்டியலாம்
முத்தும் சிரிப்பில் மறஞ்சிருக்கும்- பேச்சு
ஒவ்வொண்ணும் தேனா இனிச்சிருக்கும்

சின்னச்சின்ன மூக்குத்தியாம்
செகப்புகல்லு மூக்குத்தியாம்

வெத்தில போட்டா உன் வாய் செவக்கும்- கன்னம்
வெக்கத்தினாலே செவந்திருக்கும்
உழைக்கும் மேனி கருத்திருக்கும்-உன்
முகத்தில் தாமரை பூத்திருக்கும்

சின்னச்சின்ன மூக்குத்தியாம்
செகப்புகல்லு மூக்குத்தியாம்
கன்னிப் பொண்ணே உன் ஒய்யாரம் கண்டு
கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியா...ம்
கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியாம்-பொண்ணே
கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியா..ம்
-----------------------------------------------------------
சினிமா பாடல்களில் பிடித்த பாடல்-
படம்; பாதை தெரியுது பார்
பாடல்;பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம்
பாடியவர்; டி.எம்.செளந்தரராஜன்

3 comments:

Anonymous said...

அள்ளிச் செருகிய கொண்டையிலே என் ஆவி சிறையுண்டிருக்குதடி
துள்ளித்திரிகிற ரெண்டு கண்ணு அதச்
சொல்லி சிரிக்குது ஒண்ணுக்கொண்ணு.

இந்த வரிகளை மறந்து விட்டீர்களே
இதன் MP3 கிடைத்தால் அனுப்பவும்
நன்றி

selvraj_sg@yahoo.com.sg

said...

ஆஹா..! வெகு நாட்களாய் தேடிய பாடல். இன்றுதான் கிடைத்தது.

அதன் Mp3 வடிவ தரவிறக்கம் இதோ.

நன்றி.

said...

நெத்தியில் பொட்டு பளபளக்கும் கண்ணு நெஞ்சை இழுத்து எனை மயக்கும்..பித்துப் பிடிச்சவனென்னு சொல்லி என்னைப் பேசிபேசி இந்த ஊர் சிரிக்கும்...சின்னச் சின்ன மூக்குத்தியாம்..

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது