உன் பிறந்த நாளைப் பார்த்து
மற்ற நாட்கள்
புலம்பிக் கொண்டிருக்கின்றன...
பிறந்திருந்தால்
உன் பிறந்த நாளாய்
பிறந்திருக்க வேண்டும் என்று.
ஊரிலேயே
நான்தான் நன்றாக
பம்பரம் விடுபவன்
ஆனால் நீயோ
என்னையே பம்பரமாக்கி விடுகிறாய்.
நீ இல்லாத நேரத்திலும்
உன் இருக்கையில் அமர்ந்திருக்கிறது
உன் அழகு.
கோடை விடுமுறை வந்தால்
குளிர்ப் பிரதேசம் தேடி
ஓடுவதில்லை நான்.
ஆனால்
ஒவ்வொரு கோடை
விடுமுறையிலும்
என்னையே தேடி ஓடி வருகிறது
ஒரு குளிர்ப் பிரதேசம்.
அதற்குப் பெயர்
அத்தை மகள்.
நன்றி; தபூசங்கர் (ஆனந்த விகடன் 2-1-05)
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
தபூ சங்கரின் இன்னொரு அருமையான எனக்கு பிடித்த கவிதை..
எதை கேட்டாலும்
வெட்கத்தையே
தருகிறாயே?
வெட்கத்தை
கேட்டால்
என்ன தருவாய்?
Post a Comment