புகார் ஏது?
சர்ச்சில் ஒரு அரசியல் வாதி என்று எல்லோருக் கும் தெரியும். அவர் ஒரு ஓவியரும் கூட. ஓய்வு நேரத்தில் அவர் ஒரு நாள் சித்திரம் தீட்டிக் கொண்டிருந்தபோது, ""நீங்கள் ஏன் இயற்கைக் காட்சிகளை மட்டுமே வரைகிறீர்கள்?'' என்று ஒரு நண்பர் கேட்டார்.
உடனே சர்ச்சில், ""அதற்குக் காரணம் இருக்கிறது. தன்னை அழகாக வரையவில்லை என்று எந்த ஒரு மரமும் புகார் சொல்லாது அல்லவா?'' என்றாராம்.
- எஸ். ராதாலட்சுமி, தஞ்சாவூர்.
அண்டார்டிகா அசத்தல்!
கமல் வில்கூ என்ற 53 வயதான இந்தியப் பெண்மணி அண்டார்டிகா வில் 16 மாதங்கள் தங்கியிருந்து ஆய்வு செய்த உலகின் அதிக வயது பெண் மணி என்ற பெருமை யைப் பெறுகிறார்.
- ஆர். தங்கராஜ், திருப்பூர்.
பொலிவியா நாட்டின் லாபாஸ் என்ற நகரம் தீப் பிடிக்காத நகரம் என்ற பெயரை பெற்றுள்ளது. இது தரை மட்டத்திலிருந்து 12,000 அடி உயரத்தில் உள்ளது. அதனால் அங்கு ஆக்ஸிஜன் குறைவாக உள்ளது. எனவே எளிதாக தீப்பிடிப்பதில்லை.
- கோ. சதிஷ், பம்மல்
.300 வருடம் முடிஞ்சாச்சுஇந்தியாவிலேயே முதல் பெண்கள் பள்ளிக்கூடம் தஞ்சை மாவட்டம் தரங்கம்பாடியில் 1707ம் ஆண்டு துவங்கப்பட்டது.
- ஜி. அருள்செல்வி, சென்னை-32.
முரண்முள்ளை
கையால்தொட்டும்
குத்தவில்லை
கடிகார முள்
எம். சம்பத்குமார், காரமடை
.முதன் முதலாக.
..இந்தியாவிலேயே பெண்களை மருத்துவ படிப் பிற்கு முதன்முதலில் அனுமதித்த பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் ஆகும்.
உலகில் முதன் முதலில் பெண் வீராங்கனைகளைக் கொண்டு படை உருவாக்கப்பட்டது நியூசிலாந்து நாட்டில் தான்.
உலகின் முதல் பெண் திரைப்பட இயக்குநர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, ஆலீஸ்கை.
இந்தியாவில் பத்திரிகை நடத்திய முதல் பெண்மணி சுவர்ண குமாரிதேவி. இவர் ரவீந்திரநாத் தாகூரின் சகோதரி ஆவார்.
ஸ்பெயின் நாட்டில் குழந்தைகள் பெயருக்கு முன் முதல் எழுத்தாக அம்மாவின் பெயரை பயன் படுத்துகின்றனர்.-
ஜி. அருள்செல்வி, சென்னை – 32
**********************************************************
(வேடந்தாங்கல்), பெண்ணே நீ -மாத இதழ்
நன்றி;http://tamil.sify.com/pennaenee/fullstory.php?id=14531064
மணக்க மணக்கதமிழர் விருந்துள் தலை சிறந்தது திருமண விருந்து. அதில் பதினெட்டு வகைக் கறியும், பாயசமும் படைக்கப்படும். அந்த 18 வகைக்கறிகள் எவை யென்று தெரியுமா?அவியல், கடையல், கும்மாயம், கூட்டு, துவட்டல், புரட்டல், பொரியல், வறுவல், புளிக்கறி, பச்சடி, அப்பளம், துவை யல், ஊறுகாய், வற்றல், உளுந்துவடை, கார வடை, தேன்குழல், முக்கனிகளுள் ஒன்று - என்பனதான் அவை!- எஸ். ராதாலட்சுமி, தஞ்சாவூர்.சாதனை மகளிர்சர்வதேசப் போட்டிகளில் மூன்று முறை பங்கேற்ற உசிலம்பட்டியைச் சேர்ந்த தீபா. தனது 22 வயதில் ஊனமுற்ற நிலையில் இச்சாதனை புரிந்துள்ளார்.75 வயதான பழனி பொன்னுத்தாய் ஆயிரம் முறைக்கு மேல் நாதஸ்வரக்கக்சேரி செய்து, கலைமாமணி பட்டத்தையும் பெற்றுள் ளார். மருத்துவம் மற்றும் சட்டப்படிப்பு கற்று தொழில் செய்யும் 39 வயதான பூமா என்பவர் 2005ம் ஆண்டின் சிறந்த பெண் அதிகாரி என்ற பெருமையைப் பெற்றுள்ளார். - ஆர். தங்கராஜ், திருப்பூர்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment