கலியுகம்
காதலில் விழுந்தவனை
கை கொடுத்துத் தூக்கினேன்
காணாமல் போயின வளையல்கள்
பா.பார்கவி
******************************************************
மழை
கேரளா
ஆந்திரா
கர்நாடகத்தில்
நல்ல மழை பெய்ய
அருள்புரி
இறைவா !
வேண்டுகிறது
தமிழகம்
விஷ்ணுகுமார்
*********************************************
கைம்மாறு
அழுக்காடையில்
வாழ்க்கையை முடித்த தந்தையின்
கல்லறையில் மகன்
பதித்தான்
சலவைக் கற்கள் !
பாரதிப்பிரியன்
**********************************************
தொலைந்த வரங்கள்
விழா நாட்களில்
ஆலயத்தில்
பொங்கலிட்டு
கூழ் ஊற்றி
பக்தர்கள்
கேட்ட வரங்கள்
அம்மன் காதுகளில்
விழாமலே போனது
ஒலி பெருக்கி
சத்தத்தில்
பாரதிப்பிரியன்
*************************************************************************
வாழ்க்கை. . .
பெண்ணே
நான் இருக்க மட்டும்
உன் இதயத்தைக் கொடு
வாடகை ஆக என்
வாழ்க்கையைத் தருகிறேன்
தராசு
வெற்றியடைந்த குற்றங்களே
நியாயப்படுத்தப்படுகின்றன.
பெண் மான்
உன்னை மான் என
வருணித்தது சரிதான்
என் மனதைத் தூண்டிவிட்டு
நீ ஓடிச் சென்றாயே !
பா.பார்கவி
நன்றி;
வாசகர் கவிதை, குமுதம் 29-8-07
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment