சந்தோஷக் குடுவை

சந்தோஷக் குடுவை...
- கதிர்பாரதி

உயிர் காற்றை
உள்வாங்கி
உப்பிப் பெருத்த
பலூன்களை
குழந்தைகளுக்கு
நிரம்ப பிடிக்கின்றன.

குழந்தைகளின்
மனதைப் போல்
பலூன்களும் மேல்நோக்கி
எழும்புவதால்
இந்தப் பிடித்தம்
நிகழ்ந்திருக்கலாம்.

தகதகக்கும் தேர்
தங்க நகை அம்மன்
வானம் துளைக்கும்
வானம்...
இவை தவிர்த்து
திருவிழா நெரிசலினூடே
அநாயாசமாகக் குழந்தைகளை
ஈர்த்துவிடும் பலூனுக்கும்
தேவதைக்கும் அதிகமில்லை
வித்தியாசம்.

குழந்தை கைசேர்ந்த
பலூன்கள்
உயிர்த்துவிடுவதை
மனதால் பார்ப்பவர்கள்
உணரக்கூடும.

தாயால்
தேற்ற முடியாத
சேயின் கண்ணீரை
பலூன்கள் தீர்த்துவிடும்
சில நேரங்களில்...

பலூன்களை
இப்படிச் சொல்லலாம்'
குழந்தைகளின் சந்தோஷக்
குடுவை'காசு கொடுத்து
இரும்புக் குண்டுகளால்
பலூன்களை துளைக்கையில்
தோன்றுமெனக்கு
குழந்தையின்
சந்தோஷத்தை கொல்வதாய்..!
*************************************************************
ஆசிரியர் அறிமுகம் - செங்கதிர் செல்வன் என்ற இயர்பெயரைக் கொண்ட இவர், இதழியல் துறையில் பணிபுரிந்துவரும் ஓர் இளைஞர். எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகரனிடம் உதவியாளராக பணிபுரிந்தவர். அழகியலுடன், சமூக அக்கறையை தனது கவிதைகள் மூலம் வெளிப்படுத்தி வருபவர்.
நன்றி: யாஹூ வெப்துனியாhttp://piththan.mywebdunia.com/2008/09/03/1220416680000.html

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது