அன்போடு வேண்டுகிறேன்
அன்போடு வேண்டுகிறேன்...
காற்றாய் வாழவேண்டிய வயதில்
கற்பூரமாய் கரைந்து விடாதே..!
இளமை என்பது இனிப்பு அத்தியாயம்
சோக சிலுவைகளை சுமந்து
சிறகுகளை சேதபடுத்தி கொள்ளாதே!
நீ! கீழ் இறங்கி வா!
மலைகளிலிருந்து கீழிறிங்கி வருவது
நதிக்கு பெருமை!
விண்னை நிராகரித்து மழை
மண்ணோடு கலப்பது
மழைக்கு பெருமை!
முள்ளாய்
வாழ்ந்து முடிவதற்கா
வாழ்க்கை
மலராய் வாழ்ந்து மனம் கொடு...!
***********************************************************
காதல் என்றால்.....!
சூரியன் என்றால் உதிப்பதும்,
மறைவதும்..!
நிலவு என்றால்
இரவு, குளிர்ச்சியும்...!
கவிதை என்றால் வார்த்தையும்,
வாழ்க்கையும்..!
காதல் என்றால் ஏமாற்றுவதும்
ஏமாறுவதும் தானோ...!
****************************************************
கவிதை வற்றாது...
சூரியன் உள்ளவரை
பகல் வற்றாது!
நிலவு உள்ளவரை
இரவு வற்றாது!
வானம் உள்ளவரை
பூமி வற்றாது!
காலம் உள்ளவரை
காதல் வற்றாது!
காதல் உள்ளவரை
கவிதை வற்றாது...!
*******************************************
Posted by வாசகன்
நன்றி;http://thailu.blogspot.com/
மதியம் செவ்வாய், செப்டம்பர் 16, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment