புதிய ஆத்திசூடிக்கு பாரதி எழுதியுள்ள காப்பு பாடலில்
பரம் பொருள் வாழ்த்தாக எல்லாக் கடவுள்களையும்
குறிப்பிடுகிறார். சர்வமத சமரசமாக அனைத்து சமயங்களின்
ஒற்றுமையாகப் பாடியுள்ளார்.
பரம் பொருள் வாழ்த்தாக எல்லாக் கடவுள்களையும்
குறிப்பிடுகிறார். சர்வமத சமரசமாக அனைத்து சமயங்களின்
ஒற்றுமையாகப் பாடியுள்ளார்.
----------------------------------------------------------------------------------------------------காப்பு
''ஆத்திசூடி யிளம்பிறை யணிந்து
மோனத் திருக்கு முழுவெண் மேனியான்
கருநிறங் கொண்டு பாற்கடல் மிசைக் கிடப்போன்,
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்,
ஏசுவின் தந்தை யெனப்பல மதத்தினர்
உருவகத் தாலே யுணர்ந்துண ராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே , அதனியல் ஒளியுறு மறிவாம்,
அதனிலை கண்டார் அல்லலை யகற்றினார்,
அதனருள் வாழ்த்தி யமரவாழ் வெய்துவோம்''
என்று தொடங்குகிறார்.இதில் சைவம்,வைணவம்,இஸ்லாம்,
கிறித்துவம் ஆகிய சமயங்களைக் குறிப்பிட்டு அனைத்து மதங்களிலும் கூறப்படுவது ஒரே பரம்பொருளைப்
பற்றித்தான். அந்தப் பரம் பொருள் ஒளியுறுவது அறிவு.
அந்த நிலை கண்டாருக்கு அல்லல் இல்லை.எனவே அத்தகைய பரம்பொருளின் அருளை வாழ்த்தி அமர வாழ்வு எய்துவோம்
என்று பாரதி பரம் பொருள் வாழ்த்தைத் தனது காப்புப் பாடலில் பாடுகிறார்.
0 comments:
Post a Comment