ஃபீல்டு மார்ஷல் சாம் மானெக்ஷா காலமானார்
சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 27 ஜூன் 2008 ( 08:58 IST )
இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைமை தளபதி ஃபீல்டு மார்ஷல் சாம் பகதுர் மானெக்ஷா (94) காலமானார். நிமோனியாவால் அவரது நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குன்னூர் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று நள்ளிரவில் அவரது உயிர் பிரிந்தது.அவர் தனது கடைசி காலத்தில், மனைவி மற்றும் 6 பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தார்.இரண்டாவது உலகப் போரில் ஈடுபட்டது உள்பட மொத்தம் 40 ஆண்டுகள் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தவர், மானெக்ஷா. சுதந்திர இந்தியாவின் ராணுவத்தில் ஃபீல்டு மார்ஷல் பதவியை வகித்த முதல் இருவரில் இவர் குறிப்பிடத்தக்கவர். மற்றொருவர், ஜெனரல் கரியப்பா. கடந்த 1971-ம் ஆண்டு நடைபெற்ற இந்திய - பாகிஸ்தான் போரின்போது, இந்தியப் படைகள் வெற்றி பெற உறுதுணை புரிந்தவர், மானெக்ஷா.
3 comments:
ரொம்ப வேகமாக செய்தியை தந்ததற்கு நன்றி!
//ரொம்ப வேகமாக செய்தியை தந்ததற்கு நன்றி!//
ரிப்பீட்டேய்ய்ய்...
//கடந்த 1971-ம் ஆண்டு நடைபெற்ற இந்திய - பாகிஸ்தான் போரின்போது, இந்தியப் படைகள் வெற்றி பெற உறுதுணை புரிந்தவர், மானெக்ஷா.//
பங்களாதேஷ் பிறக்க வழி அமைத்துக் கொடுத்தவர் என்பதே சரியாக இருக்கும்.
Post a Comment