யானைகள்


யானைகளின் வயது சராசரி ஆயுட்காலம் 65 - 68 ஆண்டுகள்.
வயதாக, ஆக தும்பிக்கையிலும், தலையிலும் மற்றும் காதிலும் வெள்ளை புள்ளிகள் போன்று தோன்றும். காதுகள் மடங்குதலும், தொங்குதலும் வயதின் முதிர்ச்சி தான்.
தும்பிக்கை லட்சத்திற்கும் மேற்பட்ட தசைக் கோளங்களால் ஆனது.
யானை தன் நாக்கை வெளியே நீட்ட முடியாது.
யானையின் கண்களில் வழியும் நீரின் அளவையும், நிறத்தையும் பொறுத்து அதன் அப்போதய மனநிலை தெரிந்து விடுமாம்.
யானை வாயினுள்ளே மேலண்ணத்தில் உள்ள ஓட்டையின் மூலம் பல்வேறு வாசனைகளை உணரமுடியுமாம்.
யானைகளின் வயிற்றில் குடற்புழு 100 அடி நீளம் வரை வளரக்கூடும்.
ஒரு முறை வெளிப்படும் விந்தின் அளவு ஒன்றரை லிட்டர். அதன் கர்ப்ப காலம் 22 மாதங்கள். பெரும்பாலும் ஒரே ஒரு குட்டி தான் போடும்.
கண்கள் இரண்டும் பக்கவாட்டில் இருப்பதால் யானையால் ஓரளவுக்கு தான் முன்னால் இருப்பவற்றை பார்க்க முடியும்.
நெருக்கமாக யானையின் முன்னால் சென்றால் தன்னை தாக்க வருகிறார்களோ என யானை மிரண்டு, தலையை இடம் வலம் ஆட்டி என்ன? என்று பார்க்க முயலுமாம். எனவே யானையின் நேர் எதிரே எப்போதும் நிற்கக்கூடாதாம்.
யானையின் பக்கவாட்டில் பாகனுடன் பேசிக்கொண்டே, பாகனுக்கு பின் நாம் நின்று யானையை தொட்டால் தான் யானை பயப்படாதாம்.
நாம் யானையின் பக்கத்தில் நிற்கும் போது, அதனிடமிருந்து ஏப்பம் போன்ற ஒரு ஒலி வந்தால் நம்மை மிகவும் தோழமையுடன் நினைக்கிறது என்று அர்த்தமாம்.
மாவூத்தன் 60 கட்டளைகள் மூலம் யானையை கட்டுப்படுத்துகிறான்.
ஒரு மைக்ரோ சிப் (ஒரு குண்டூசியின் அளவை விட சிறியது) யானையின் காதுக்கு பின்னால் பொருத்தி முகாமிலிருந்து யானையை கண்காணிக்கிறார்கள்.
நன்றி;
http://veyilaan.wordpress.com/

1 comments:

Anonymous said...

ராம்மலர்,

என்னுடைய பதிவிலிருந்து எடுத்து மறுபதிவு இட்டதற்கு நன்றி!

veyilaan.wordpress.com என்ற சுட்டிக்கு பதில் கீழே உள்ளதை இணைத்து விடுங்கள்.

http://veyilaan.wordpress.com/2008/06/27/topslip/

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது