மருதாணி


மருதாணி நன்றாக கலர் பிடிக்க மருதாணி ஆயில் மற்றும் கிராம்புத் தைலம் கலந்து விடவும்.
கைகளில் இருந்து மருதாணி உதிராமல் இருக்க, கொஞ்சம் காய்ந்தவுடன் சர்க்கரையும் எலுமிச்சைசாறும் கலந்து வைக்கவும்.
அதிக கலர் கைகளில் பிடிக்க, சூடான வாணலியில் கிராம்பு போட்டு வெடிக்க விட்டு, அதன் மேல் வரும் புகையில் கைகளை காட்டவும்.
கைகளில் யூக்கலிப்டஸ் ஆயில் தடவிக் கொண்டு மருதாணி வைத்தால் சளி பிடிக்காது.
மருதாணி எடுத்த பிறகு மருதாணி ஆயில் தடவி அரைமணி நேரம் வைத்து பின்பு வாஷ் செய்தால் கலர் சீக்கரம் அழியாமல் இருக்கும்.
மருதாணி எடுக்கும் போது தண்ணீர் உபயோகித்தால் நிறம் மங்கும்.
source:www.tamilkudumbam.com

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது