மறைவாய் சொன்ன கதைகள் கி.ராஜராராயணனும் கழனுயூரனும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இடம் பெறுகின்றன. அதிலிருந்து ஒரு கதை
ஒரு அம்மாள் ரொம்ப நல்ல குணம். மொழு மொழு என்று, சதைப் பிடிப்போடு நன்றாக இருந்தாள். பாவம், விதவை. அதனால் பக்தி மார்க்கத்திலே திரும்பிவிட்டாள். பக்தர்களுக்கு - சாமியார்கள், பண்டாரம் பரதேசிகள், இப்படி எவ்வளவோ பேர் இல்லையா! அவர்களுக்கு - ரொம்பவும் உபகாரம் பண்ணலானாள். பொருளாலும் உழைப்பு பணிவிடைகளாலும், இஷ்டப்பட்ட பேருக்கு உடலாலும் திருப்திகரமாகத் தொண்டாற்றினாள்.
ஒரு சமயம் ஒரு சாமியார் வந்தார் பக்திக் காரியங்களில் மிகுந்த ஈடுபாடு காட்டி வந்த அந்த அம்மாள் வீட்டில் தான் தங்கினார். அவள் வழக்கம் போல் பொருள், உணவு, உழைப்பு, உடல் அனைத்தும் ஈந்து அவர் மனம் குளிர சேவை செய்தாள். அதில் அவளுக்கும் ரொம்ப திருப்தி.ஒரு வாரம் சென்றது. சாமியார் புறப்பட்டுவிட்டார். அங்கேயே இருக்க முடியுமா பின்னே? அந்த அம்மாளை வெகுவாய்ப் புகழ்ந்தார் மறக்கவே முடியாது என்றார்.அவள் கண்ணைக் கசக்கினாள். இனிமேல் இராத்திரிப் பொழுதுகள் சிரமப்படுத்தும்; தனிமையில் கஷ்டமாகத்தானிருக்கும் என்று சிணிங்கினாள்.
சாமியார் யோசித்தார். 'கவலைப்படாதே. நாராயணன் கிருபை செய்வான்' என்று சொல்லி, பைக்குள் கையைவிட்டு ஒரு சாமானை எடுத்தார்.கழுத்து மாதிரி - உலக்கையின் நுனிப்பகுதி மாதிரி - அது இருந்தது. அரை அடிக்கும் அதிகமான நீளம். மினுமினுப்பாக, கடைசல் பிடித்தது மாதிரி, பருமனாக இருந்தது.அதை அவர் அந்த அம்மாளிடம் தந்து, 'இது ரொம்பவும் புண்ணிய விஷயம். ஒரு சித்து புருஷரின் அருள் பெற்றது. உனக்கு எப்போ ஆசை ஏற்பட்டாலும் சரி. இதை அடிவயிற்றில் வைச்சு, நாராயணா நாராயணா என்று சொல்லு இது உள்ளே புகுந்து திவ்யமா விளையாடும். உனக்கு திருப்தி ஏற்பட்டதும் சிவசிவான்னு சொல்லு. இது மறுபடியும் பழைய நிலைமை அடைந்துவிடும்' என்றூ சொன்னார் 'இதைப் பத்திரமாப் பார்த்துக்கோ' என்றும் எச்சரித்துவிட்டுப் போனார்.
அந்த அம்மாள் சாயங்காலம் குளித்து, இரவானதும் பிள்ளையார் பூஜை செய்துவிட்டு, சிறிது உணவு உண்டு, உரிய நேரத்தில் படுத்தாள். முறைப்படி அந்தக் கழுத்தை எடுத்து தொடைகளுக்கிடையே கொண்டு போய், 'நாராயணா நாராயணா' என்று மந்திரம் போல் உச்சரித்தாள்.ஆச்சர்யம்தான், அது உயிர் பெற்றது. அவளுக்கே 'போதும்' என்று பட்டதும், சிவசிவா என்று பெருமூச்சுடன் முனகினாள்.அது வெளிவந்து அவள் வயிற்றின் மீது ஜீவனின்றிப் படுத்து விட்டது.அவள் அயர்ந்து தூங்கிவிட்டாள். பிறகு கண்விழித்ததும் அதை எடுத்து முத்தமிட்டாள், ஆசையாய் தடவிக் கொடுத்தாள். அதை கழுவி பவுடர் பூசி விளக்குமாடத்தில் வைத்தாள்.தினம் அதைக் குளிப்பாட்டி பூ போட்டு பக்தியோடு கும்பிட்டாள் ராத்திரி பொழுதுகளில் உள்ளே புகுந்து விளையாட விட்டாள். ஆகவே அவளுக்கு சந்தோஷத்துக்குக் குறைவே இல்லை.
ஒரு நாள் வேறொரு பரதேசி வந்தார். நாமம் போட்டுக் கொண்டு விஷ்ணு பக்தராகக் காட்சி அளித்தார். அந்த அம்மாளின் தர்ம சிந்தயைக் கேள்விப்பட்டு, அவள் வீட்டுக்கே வந்தார். அவளும் வழக்கப் பிரகாரம் உபசரித்தாள். இரவு அங்கேயே தங்கினார். புண்ணிய ஸ்தலங்கள், தீர்த்த யாத்திரை பற்றி எல்லாம் பேசிக் கொண்டிருந்தார்.நேரம் ஆகிவிட்டது அவருக்கு கொட்டாவி கொட்டாவியாய் வந்தது, அவர் நாராயணா நாராயணா என்று உச்சரித்துக் கொண்டே வாயை பிளந்தார்.
விளக்குமாடத்திலிருந்த 'வரப்பிரசாதம்' பாய்ந்து வந்து அவர் வாயுள் புகுந்துவிட்டது. அவர் பதறிப்போனார்.அந்த அம்மாள் திடுக்கிட்டுத் திகைத்து, என்ன செய்வது என்று தெரியாமல் உட்கார்ந்துவிட்டாள். பிறகு சமாளித்துக் கொண்டு 'சிவசிவா சொல்லுங்க, சீக்கிரம் சிவசிவா சொல்லுங்க' என்று கத்தினாள்.அவர் வீரவைஷ்ணவர், சிவன் நாமத்தைச் சொல்லவே மாட்டார் அதைச் சொல்லாமல் கஷ்டப்பட்டார்.'சிவசிவான்னு சொன்னால் தான் அது நிற்கும். தயவு செய்து சொல்லுங்க என்று அவள் கெஞ்சினாள்.அவரும் இம்சை தாங்க மாட்டாமல், சிவசிவா என்றார் அது தானாக ஓய்ந்து விலகிக் கீழே விழுந்தது.அந்த அம்மாள் அதை எடுத்துப் பத்திரப்படுத்திவிட்டு அவருக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்வதில் ஆர்வம் காட்டினாள்.
*இந்தக் கதை சைவ, வைணவ எதிர்ப்பு அதிகரித்து இருந்த கால கட்டத்தில் எத்தனையோ நாட்டுப்புறக் கதைகள் 'அதை' மையமாகக் கொண்டு கிராமத்து மக்களால் படைக்கப்பட்டுள்ளது. அதில் இது ஒருவிதக் கதை. மூத்த எழுத்தாளர் ஒருவர் சேகரம் செய்து கொடுத்த நாட்டுப் புறப் பாலியல் கதை இது.
Courtesy:http://kundavau.wordpress.com