ஒரு ஊரில் பாட்டி ஒருத்தி வடை சுட்டு விற்று வந்தாள். ஒரு நாள் அவ்வழியாக பறந்து வந்த காக்கா ஒன்று ஒரு வடையை தூக்கிக்கொண்டு பறந்து போய் மரக்கிளை ஒன்றில் உட்கார்ந்து கொண்டது. அந்த வழியாக வந்த நரி, வடையோடு காக்காவை பார்த்துவிட்டது; வடையைத் தான் எடுத்துக்கொள்ள ஒரு தந்திரம் செய்தது.
காக்காவைப் பார்த்து காக்கா, நீ மிகவும் அழகாக இருக்கிறாய். உனக்கு குரலும் கூட அழகாக இருக்கக்கூடும், ஒரு பாட்டுப் பாடு என்றது. காக்கா தன் வாயைத் திறந்து "கா.. கா..." என்று பாட்டுப் பாடவே வாயிலிருந்த வடை கீழே விழுந்துவிட்டது. நரி வடையை கவ்வி எடுத்துக்கொண்டு போனது
**********************************************
கதையின் மாறுபட்ட வடிவங்கள்
இக்கதையின் முடிவு பின்னாட்களில் வெவ்வேறு விதமாக மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. காக்கா தன் கால்களின் இடுக்கில் வடையை வைத்துக் கொண்டு பாடிக்காட்டி நரியை ஏமாற்றியதாக கதை முடியும் இதில் பிரபலமான வடிவமாகும். இவ்வாறான இன்னுமொரு வடிவம் பின்வருமாறு அமைகின்றது:
“ வடையைக் காலில் வைத்தபடி பாட்டுப் பாடியது ...காகம் ஏமாறவில்லை.!
நரி கேட்டது...அழகாகப் பாட்டுப்பாடினாய் இனி ஒரு நடனம் ஆடு என்று..காகம் மீண்டும் வடையை வாயில் வைத்துக் கொண்டு நடனம் ஆடியது. நரி மீண்டும் ஏமாந்தது.
நரி யோசித்துவிட்டு....பாட்டும் பாடினாய்..ஆடியும் காட்டினாய், அற்புதம்...இனி ஆடலுடன் பாடலும் பாடி...ஒரு நாடகம் நடி பார்க்கலாம் என்று கேட்டது.
காகம் மீண்டும் வடையைக் காலில் வைத்துக் கொண்டு,,நான் பாடினேன் ஆடினேன்...நாடகம் நடிப்பதற்கு சக்தி வேண்டும் இந்த வடையை சாப்பிட்ட பின்னர் நடித்துக் காட்டுகிறேன் நண்பனே என்றது. நரி மீண்டும் ஏமாறியது.
source http://ta.wikipedia.org/wiki/
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment