பங்குனி உத்திரம்
குரு வீடான மீனராசியில் சூரி யனும், கன்யா ராசியில் சந்திரனும் சம மாகப் பார்த்துக் கொள்ளும் திருநாளே பங்குனி உத்திரம். ஸ்ரீசுப்பிரமணியர் வள்ளியையும், ஸ்ரீராமர், சீதையையும், உமாதேவி சிவபெருமானையும் திருமணம் செய்து கொண்ட திருநாள் இது. ஸ்ரீரங்கநாச்சியார், ஸ்ரீஐயப்பன் பிறந்த திருநாள். குடந்தை ஸ்ரீஆதி கும்பேஸ்வரர் மகாமகக்குளத்தில் தெப்பத்தில் வலம் வரும் வைபோக தினம் இதுவே. சென்னை, மயிலை ஸ்ரீகற்பகாம்பாள்ஸ்ரீகபாலீஸ்வரர் திருமணமும் ஆண்டு தோறும் இன்றுதான் நடக்கும். ஸ்ரீமகாலக்ஷ்மி இன்று விரதம் இருந்து திருமாலின் மார்பில் இடம் பெற்றாள். இதே விரதத்தால் இந்திரன் இந்திராணி யையும், ஸ்ரீபிரம்மா சரஸ்வதியையும் அடைந்தனர். ரதியின் பிரார்த்த னைக்கு செவி சாய்த்து மன்மதனை
மகேஸ்வரன் உயிர் பெறச் செய்த திரு நாள் இது. வடநாட்டில் இதை ஹோலி என்று வண்ணப்பொடிகளை வாரியி றைத்துக் கொண்டாடுகின்றனர்.
இத்தினத்தில் தான் வில்வீரன் அர்ஜுனன் பிறந்தான். காஞ்சி ஸ்ரீவரதர், மதுரை ஸ்ரீகூடலழகர், திருமோகூர், ஸ்ரீவில்லிப்புத்தூர்,அழகர் கோயிலில் திருக்கல்யாண வைபவத்தை இன்று தரிசிக்கலாம். காஞ்சி, திருவாரூர் போன்ற ஸ்தலங்களில் ருத்ரபாத தீர்த்தமும் பெறலாம். திருநாவலூர் ஸ்ரீதண்டபாணி ஸ்வாமிக்கு பக்தர்கள் 1008 காவடி எடுத்து வந்து சமர்ப்பிக்கிறார்கள்.
**********************************
நன்றி; http://rp-padaippu.blogspot.com/2005/04/2005
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment