1)அரைச்சாண் ராணி,அவளுக்குள்ளே,ஆயிரம் முத்துக்கள்--அது என்ன ?
2)இத்தணூன்டு சிட்டுக்குருவிக்கு,ஆழு முழம் சித்தாடை.-அது என்ன?
3)எட்டுக்கால் ஏகாம்பரம்,வலை பின்னுவதில் கெட்டிக்காரன்.-அவன் யார்?
4)எண்ணைய் வேண்டா விளக்கு,எரியும் போதே உருகும்-விளக்கு,-அது என்ன?
5)ஓடியாடி உழைத்தும், மூலைதான் இவன் இருப்பிடம்,-அது என்ன?
6)பூக்காமல் பூத்திருப்பாள்,தெரியாமல் மறைந்திருப்பாள்-அவள் யார் ?
7)மரத்துக்கு மரம் தாவியோடும்,முத்தம்மா மகனுக்கு முதுகிலே மூன்றுகோடு, -அது என்ன ?
8)விரித்தால் நாம் தூங்கலாம், சுருட்டினால் அது தூங்கும்-அது என்ன ?
9)ஒரு மழை பெய்தாலே பல குடை வந்துவிடும்.-அது என்ன ?
10)குண்டுச் சட்டியில் கெண்டை மீன், -அது என்ன ?
--------------------------------------------------------------
விடைகள்;1.வெண்டைகாய்
2..வெங்காயம்
3.எட்டுகால் பூச்சி/ சிலந்தி
4.மெழுகுவர்த்தி
5.துடைப்பம்
6.அத்திப்பூ
7.அணில்
8.பாய்
9.காளான்
10.கண்
-----------------------------------
நன்றி; (தொகுத்தவர் ; சி.இலிங்கசாமி)
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment