மொரீசியஸ் நாட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயிலில்
சுவாமிமலை ஸ்தபதிகளால் உருவாக்கப் பட்ட ஐம்பொன்
சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன.
மதுரை சத்யசாய் நகரில் உள்ள சாய்பாபா கோயில் நிர்வாகி
ஸ்ரீனிவாசன் நமது நிருபரிடம் கூறிய தாவது: மொரீசியஸ்
அர்த்தநாரீஸ்வரர் கோயில் சாய் பாபா பக்தர்களால்
உருவாக்கப்பட்டது.
இக்கோயிலில் ஐம்பொன் சுவாமி சிலைகள் பிரதிஷ்டை
செய்யப்படவுள்ளன. இதற்காக கும்பகோணம் சுவாமிமலை
ஸ்தபதி ராஜேந்திரன் குழுவினரால் ஐம்பொன்னால்
உருவாக்கப்பட்ட விநாயகர், வள்ளி தெய்வாணை முருகன்,
அர்த்தநாரீஸ் வரர், ராமன் லட்சுமணன் சீதாதேவி அனுமன்,
ராதா கிருஷ்ணன், விஷ்ணு துர்கா, அனுமன் சுவாமி சிலைகள்
மொரீசியஸ் கொண்டு செல்லப்படவுள்ளது.
இச்சிலைகளுக்கு சத்யசாய் நகரில் உள்ள சாய்பாபா கோயிலில்
இன்னும் இரண்டு நாட்களுக்கு (மே 11 மற்றும் 12) பூஜைகள்
நடக்கும்.ஐம்பொன் சிலைகள் தவிர கற்சிலைகள்,
துஜஸ்தம்பம் (கொடிக் கம்பம்) சுவாமிமலை ஸ்தபதிகளால்
உருவாக்கப்பட்டு வருகிறது.
அவைகள் விரைவில் மொரீசியஸ் அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
source:
http://www.dinamalar.com/tnsplnewsdetail.asp?News_id=3948
0 comments:
Post a Comment