நீ மட்டும் எப்படி! (சிறுகதை)

splarticles image

பழுத்த அந்த கொய்யா மரத்தை அன்பு அணிலுக்கு
ரொம்ப பிடிக்கும். பழுத்து, தித்திக்கும் அந்த கொய்யா
பழ மரத்தில் அணில் மரக் கிளைகளில் தாவி விளையாடிக்
கொண்டிருந்தது. மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தது.

அணில் மரங்களில் கனிந்துள்ள பழங்களைச் சாப்பிட்டது.
பிறகு கிளைகளில் தாவி விளையாடியது. மரத்தினடியில்
நிழலுக்காக ஓநாய் ஒன்று படுத்திருந்தது. அது மேலே
அணிலின் விளையாட்டினை பார்த்துக் கொண்டு இருந்தது.

திடீரென அணில், கிளைக்குத் தாவும் பொழுது, நழுவி
கீழே விழுந்துவிட்டது. ஓநாய் மடியில் விழுந்தது அணில்.
உடனே ஓநாய் அதை பிடித்துக் கொண்டது.
தம்மை விடும்படி அணில் மன்றாடிக் கெஞ்சியது.

ஓநாயும், ""சரி உன்னை விட்டு விடுகிறேன். என்
கேள்விக்கு நீ சரியான பதில் தர வேண்டும்,'' என்றது.

""சரி கேளுங்கள். தெரிந்ததைக் கூறுகிறேன்.''

""உன்னை விட நான் பெரிய ஆள், பலசாலிதானே!''

""ஆமாம் அது தான் உண்மை.''

""இப்படிப்பட்ட பலசாலியிடம் இல்லாத மகிழ்ச்சி, உன்னிடமும்,
உன் இனத்தாரிடம் மட்டுமே காணப்படுகிறதே...

""இதற்கான பதிலை என்னால் கூற முடியும். ஆனால், முதலில்
என்னை விட்டு விடுங்கள். அப்பொழுதுதான் கூறுவேன்,''
என்றதும் அணிலை, விட்டு விட்டது ஓநாய்.

அணில் தப்பித்தோம், பிழைத்தோம் என எண்ணி மரத்தில்
ஏறி ஒரு கிளையில் அமர்ந்து கொண்டு சிரித்தது.

""சரி இப்பொழுது சொல்,'' என்றது ஓநாய்.


""நீங்கள் எப்பொழுதும் யாரை கொல்லலாம் என்ற
எண்ணத்துடனே இருக்கிறீர்கள். இதனால் உங்கள்
எண்ணங்களே உங்களை வதைக்கிறது. அது உங்களை
மகிழ்ச்சியாக இருக்க விடாது.''

""நாங்கள் அப்படி அல்ல, நல்ல சிந்தனையுடன் வாழ்கிறோம்.
அதனால் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம்.
இதுதான் மறுக்க முடியாத உண்மை ஆகும்,'' என
அணில் கூறி மகிழ்ச்சியுடன் தாவிக் குதித்து ஓடியது.


நீதி : எப்பொழுதும் நல்லதையே நினைப்பவர்கள்
ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியுடனும் வாழ்கின்றனர்.
பிறருக்குத் தீங்கு செய்யும் புத்திக் கொண்டவர்கள்
மகிழ்ச்சியாக வாழ முடியாது குட்டீஸ்.
**********************************************************
நன்றி; தினமலர்(சிறுவர்மலர்)

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது