வாசலில் ஸ்டிக்கர் கோலம் ஒட்டலாமா?

வாசலில் ஸ்டிக்கர் கோலம் ஒட்டலாமா? - பதில் சொல்கிறார் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

சக்தி விகடன் மே 09,2009,
_______________________________________
திருவிளக்கில் மீதமாகும் எண்ணெயை, மீண்டும் விளக்கேற்ற பயன்படுத்தலாமா? - பி.இந்திராணி, சென்னை.


இயற்கை அளித்த பொருட்களை வீணாக்குவது தவறு. இவற்றை உரிய முறையில் பயன்படுத்துவதே சரி! எண்ணெய்க்கு பர்யுஷாதம் (பயன்படுத்திய மாசு) கிடையாது. எனவே, அதை திரும்பவும் பயன்படுத்தலாம். முதல் நாள் எண்ணெயில் பொரித்த வளுவல்களை மறுநாள் பயன்படுத்துவது உண்டு. இழந்திருந்தால் மாற்றி விட வேண்டும்.


அபார்ட்மென்ட்களில் வசிக்கும் சிலர், வீட்டு வாசலில் ஸ்டிக்கர் கோலம் ஒட்டியுள்ளனரே, இது சரியா? - மீனா ரெங்கநாதன், சென்னை-33.


பழைய ஒண்டிக்குடித்தனமே தற்போது அபார்ட்மென்ட் கலாசாரமாகியிருக்கிறது. ஒண்டிக்குடித்தனத்தில் மெய்ன்டனன்ஸ் பணம் கட்ட வேண்டாம். அபார்ட்மென்ட் வாசிகளை பொறுத்த வரையில் சுவர்கள் கூட அவர்களுக்கு சொந்தம் கிடையாது. அறைகளில் இருக்கும் இடைவெளி (ஆகாசம்) மட்டுமே சொந்தம்.


பண்பு, பழைமை, பெருமை ஆகியவற்றின் அடையாளமான தனி வீட்டில் வசிக்கும் வாய்ப்பை இழந்த பிறகு, வாசலில் உள்ள கோலத்தை மட்டும் பிடித்து கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. தாராளமாக ஸ்டிக்கர் கோலத்தை பயன்படுத்தலாம். நெற்றிக்குஸ்டிக்கர் பொட்டை பயன்படுத்தும் நமக்கு, ஸ்டிக்கர் கோலத்தை பயன்படுத்துவதில் மன நெருடல் ஏன்? தேடையே இல்லை. இதெல்லாம் சாஸ்திரத்துக்கு உட்படாத விஷயம் தான். எனினும் தன்னிச்சையாக செயல்படலாம்.


நோய்களும், துன்பங்களும் விலக மந்திரம் ஜபிப்பதும், ஹோமங்கள் செய்வதும் வழக்கம். ஆனால், இவற்றை கடைப்பிடிக்க இயலாதவர்கள் என்ன செய்வது? - ஜி.ஜெயராமன், கூந்தலூர்


முற்பிறவியின் கர்மவினைகள், இந்த பிறவியில் நோயாக மாறி துயரம் தர வாய்ப்பு உண்டு. இந்த துன்பம் நீங்குவதற்கு மருந்து, கொடை, ஜபம், ஹோமம் மற்றும் அர்ச்சனை ஆகிய உதவும் என்கிறது கர்ம விபாகம் எனும் நூல். மருந்துக்கு கட்டுப்படாத சில பிணிகளுக்கு முன்ஜன்ம வினைகளே காரணம் என்கிறது ஆயுர்வேதம் (பாபம் கர்மசகுர்வதாம்...) முற்பிறவி வினைகள், நோயாக உடலில் பற்றி கொள்ளும் என்கிறது வேதம் (அங்கே அங்கே வை புருஷஸ்ய..)


வழிபாடுகள் செய்ய முடியாத அளவுக்கு உடலில் நலிவுற்று இருந்தால், இறைவன் நாமத்தை மற்றொருவர் மந்திரம் சொல்லலாம். அதே நேரம்... பொருளாதார சூழலை காரணம் காட்டி வழிபாடுகளை தவிர்ப்பது சரியல்ல.


எண்ணெய் தேய்த்து குளிக்கும் நாளில், அகத்தி கீரை சாப்பிடக்கூடாது என்றும், சமைப்பதற்கு முதல் நாளே இந்த கீரையை வாங்கி வைக்க கூடாது என்றும் கூறுகிறார் என் பாட்டி. இது குறித்து சாஸ்திரம் என்ன கூறுகிறது?


- பி.இந்திராணி, சென்னை.


செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெண்களும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் ஆண்களும் எண்ணெய் தேய்த்து குளிப்பார்கள். இந்த நாட்களில் உடல் உறுப்புகள் சற்று அசதியை சந்திக்கும். அப்போது, அகத்தி கீரை முதலானவை உடல் நலனுக்கு ஏற்புடையதாக இருக்காது. எனவே இது போன்ற நாட்களில் அகத்தி கீரையை தவிர்க்க சொல்கிறது ஆயுர்வேதம்.


தவிர... கிழமைகள், கிரகங்களின் பெயரில் அமைந்திருக்கின்றன. அந்தந்த கிழமைகளில் அந்தந்த கிரகங்களின் தன்மை புலப்படும். ஆராயாமல் எதிர்ப்பது செவ்வாயின் இயல்பு. உறங்கி கிடக்கும் ஆசையை தூண்டுவது வெள்ளியின் இயல்பு. சுணக்கமுறுவது சனியின் தன்மை. உணவுகளின் மூலம் இவற்றின் தன்மைகள் மேலும் தூண்டப்படாலம். இதை தவிர்க்க குறிப்பிட்ட நாட்களில் கீரையை தவிர்க்கலாம். இது ஜோதிடத்தின் அறிவுரை. உங்கள் பாட்டி சொல்வதிலும் பொருள் இருக்கிறது.



என் கணவர் இறந்து விட்டார். குழந்தை இல்லாததால், என் சகோதரரின் மகனே இறுதி காரியங்கள் செய்ததுடன், திதியும்� காடுத்து வருகிறான். ஒரு வேளை... திதி கொடுப்பதை அவன் நிறுத்தி விட்டால், நான் என்ன செய்வது? (என் கணவர் உயிருடன் இருக்குமு“போதேகயை சென்று ஆத்ம பிண்டம் போட்டுள்ளார்)

-எம்.சரோஜா, திருப்பாலை.


உங்கள் சகோதரரின் மகன் திதி கொடுப்பதை நிறுத்திவிட்டால்,தாங்களே திதி கொடுக்கலாம். இறுதி சடங்கை சகோதரரின் மகன் செய்திருந்தாலும், வருடம் தோறும் கணவரின் நினைவு நாளின் நீங்கள் திதி கொடுப்பது சிறப்பு. அவர் தொடருவானா? நிறுத்தி விடுவானா என்ற சிந்தனை தேவையற்றது. அதேபோல், உங்கள் கணவர் கயையில் தனக்காக ஆத்ம பிண்டம் போட்டு கொண்டு விட்டார் என்பதை ஆராய்வதும் வீண். திதி கொடுப்பதுடன் அன்று அன்னதானமும் செய்யுங்கள். குழந்தை இல்லாத நிலையில் தாங்கள் உங்கள் கணவரது நினைவு நாளின் அன்னதானம் செய்வது சிறப்பு.



உறவினர்கள் இறந்து விட்டால் ஒரு வருடத்துக்கு மலைக்கோயில் மற்றும் கொடிமரம் உள்ள கோயிலுக்கு செல்லக்கூடாது. குலத்தெய்வம் கோயிலுக்கு செல்லலாம் என்கிறார்கள். ஏன் இப்படி?


ஈமச்சடங்கில் நேரடித் தொடர்பு கொண்டவர்கள் ஒரு வருடம் வரை கோயிலுக்கு செல்வதில்லை. இறந்த பெற்றோர்களின் நினைவு மற்ற அலுவல்களால் தடைப்பட்டு விடும்என்பதால் இதனை தவிர்த்தனர். பெற்றோர்அல்லாத உறவுகள் இறந்தால், கோயிலுக்கு செல்ல தடையேதும் இல்லை. வழிபடுவதற்காக கோயிலுக்கு செல்லலாம். அதே நேரம் நேர்த்திக்கடன் மற்றும் சிறப்பு பூஜை ஆகியவற்றுக்காக கோயிலுக்கு செல்வது சரியில்லை. �க்ஷத்ராடம் மற்றும் விசேஷ பூஜைகளை ஓராண்டு நிறைவுற்றதும் செய்யலாம். துக்கத்துடன் செய்ய வேண்டிய கட்டாயமில்லையே...? இறந்தவரது துக்கம் ஒரு வருட காலம் இருப்பதால் அந்த வருஷத்தில் நீங்கள் கோயிலுக்கு சென்றதாகவே எடுத்துக்கொள்கிறது சாஸ்திரம்.


அரசியல் தலைவர்கள், மறைந்ததும் ஏறு நாட்கள் வரை அலுவல்களை தள்ளி ��படுகிறோம். இறந்த நாளுக்கு விடுமுறை அளிப்பதும் உண்டு. ஆக எந்த சம்பந்தமும் இல்லாதவர்கள் இறந்து போனதற்காக துக்கம் கொண்டாடுகிற போது, நம் பிறப்புக்கு ஆதாரமான பெற்றோர் இறந்து விட. ஒரு வருடத்துக்கு துக்கம் மேற்கொள்வதில் தவறில்லையே? பெற்றோரின் நினைவில் மூழ்கிய மனம், பிற விஷயங்களில் அக்கறையுடன் ஈடுபடாது. ஆகவே கோயில் ஆராதனையைஅந்த ஆண்டு தவிர்ப்பதே மரபு.


இறந்தவரின் இறுதிச்சடங்கினை ஓராண்டுபூர்த்தியாகும் நாளில் தான் செய்ய வேண்டும். ஆண்டின் முடிவில் வருகிற சிராத்தம் தான் இறுதிசடங்கு (ஆனால் 12ம் நாளிலேயே பலகாரங்களை வைத்து இறுதிச்சடங்கு செய்வதற்கு பரிந்துரைத்தது தர்மசாஸ்திரம்) எனவே ஓராண்டு வரை தீ�க்ஷ வேண்டும் என்பர்.


அம்மன் கோயில்களில் பெண்கள் சிலர் திடீரென சாமி வந்து ஆடுகின்றனரே ஏன்?


- தி.க.வேல்முருகன், திட்டக்குடி.


பாட்டு, அத்துடன் இணைந்த பக்கவாத்திய ஒலி ஆகியவை காதில் விழும்போது மனம் சற்று நிலை தடுமாறும். ரயில்வண்டி எழுப்பும் ஒலி, அருகில் இருக்கும் பொருட்களில் அதிர்வை ஏற்படுத்துவது போல, வாத்தியங்களின் ஓசை மனதை பாதிப்பது உண்டு. இதை மனதின் பலவீனமாக கருதுகிறது ஆயுர்வேதம். மனோதிடம் இருப்பவரிடம் எந்த பாதிப்பும் இருக்காது.



அன்னபூரணி வைத்து வழிபடுவதற்கு பயன்படுத்திய அரிசியை என்ன செய்வது? -எஸ்.சுந்தர், திருநெல்வேலி.


அன்னபூரணி வழிப்பாட்டில் தினம் தினம் புது அரிசியை பயன்படுத்தவேண்டும். முதல் நாள் உபயோகித்த அரிசியை மறுநாள் உணவுக்கு பயன்படுத்தலாம். அன்னபூரணியைகுடியிருத்திய அரிசி என்பதால் அதற்கு தனிச்சிறப்பு உண்டு. இதை உணவாக உட்கொள்ளும்போது மன நிறைவு ஏற்படும். அன்னமே ஆண்டவன் என்கிறது வேதம் (அன்னம் பிரம்மேதி...) பசியாற்றுகிற அரிசியை அலட்சியப்படுத்த கூடாது.


ஸ்ரீருத்ரம் முதலானவேத ஸ்லோகங்கள் அடங்கிய சி.டி.க்களை எல்லா நாளிலும் வீட்டில் ஒலிக்க விட்டு கேட்கலாமா? அல்லது விசேஷ நாளில் மட்டுமே கேட்க வேண்டுமா?


-என்.காயத்ரி


சி.டி.க்கள் மூலம் வேத ஸ்லோகங்களை ஒலிக்க செய்வதிலும் கேட்பதிலும் தர்மசாஸ்திரத்துக்கு உடன்பாடு இல்லை. புனிதமான ஸ்லோகங்கள், நம் வாய்மொழியாக.... வேத கோஷமாக வெளி வர வேண்டும். தேசிய கீதம் இசைக்கப்படும் போது... எந்த வேலையில் ஈடுபட்டிருந்தாலும் அதிலிருந்து விடுபட்டு நம் மனம் தேசிய கீததத்தில் ஒன்றிவிடும். காரணம், உயிரினும் மேலாக தேசிய கீதத்தை நாம் மதிக்கிறோம். அதுபால, எழுதாக கிளவியாகிய வேதத்தின் ஸ்லோகங்களை உச்சரிக்கும்போது எத்தனை எழுத்துக்கள் வெளிபடுகின்றனவோ, அத்தனை முறை பரம்பொருளின் திருநாமத்தை (ஹரி நாமத்தை) சொன்ன பலன் கிடைக்கும் என்கிறது தர்ம சாஸ்திரம்.

சங்கீத கச்சேரி, கால�க்ஷபம் மற்றும் திரைப்பாடல்கள் முதலானவற்றை டேப் ரெக்கார்டர் அல்லது சி.டி. பிளேயரில் ஒலிக்க விட்டு, அவற்றை கேட்டுக்கொண்டே வேலையில் ஈடுபடுவது உண்டு. ஆனால், வேத ஸ்லோகங்களை கேட்பதில் இந்த அணுகுமுறை கூடாது. வேதம் கற்பதற்கும், வேத ஸ்லோகங்களை உச்சரிப்பதற்கும் கடும் கட்டுப்பாடுகளை வேதமே விதித்திருக்கிறது. இதை கடை சரக்காக மாற்றுவதில் தர்மசாஸ்திரத்துக்கு உடன்பாடில்லை.


அதே நேரம்.... தங்களின் ஆதங்கமும் புரிகிறது. வேதம் கற்க இயலவில்லை. வேதம் ஓதுவோரை அழைத்து வேதம் ஓடச் செய்து கேட்கலாம் எனில்... அதற்கு பொருளாதார சூழல் இடம் தரவில்லை. ஆகவே, ஸ்லோகங்களை சி.டி.க்கள் மூலம் கேட்க ஆசைப்படுகிறீர்கள். உங்களின் ஆர்வம். விஞ்ஞானத்தின்உதவியால் வேதம் கேட்கும் வாய்ப்பை பயன்படுத்துவதில் தவறில்லை என்பதாக எண்ணி இப்படி செய்லபடவைக்கிறது. தங்களின் ஆர்வத்தை பொருட்டு, இறைவனின் திருநாமங்கள் அடங்கிய சி.டி.க்களை பயன்படுத்துங்கள். பயன் உண்டு.






0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது