வீடு

பொணம்
தொங்கிய வீடுன்னு
இனி பொறக்கப் போற
கொழந்த கூட
சொல்லக்கூடாதுன்னு

கொல்லப்புறத்துல
இருக்கற வேப்பமர
கிளையைப் பார்த்தா

அதுவும் சிட்டுக்குருவிக்கு
வீடாய் போக
எனக்குள்ள தூக்குப
போடற புத்தி

உசுரோட செத்துப்
போச்சு. . .
-------------------------
>வஸந்த் பூபதி
நன்றி; குமுதம் 13-2-08

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது