யாருக்கு 'பவர்' அதிகம் ?

ஒவ்வொரு ஜவுளிக்கடை வாசலிலும் ஒரு இருக்கை
போடப்பட்டிருக்கும் . அதில் ஒரு அப்பாவி கணவன்
இருப்பான். அந்த சேருக்கு என்ன பெயர்?

''புருசன் சேர்!''

-------------------------------------------------------------------------------
யாருக்கு 'பவர்' அதிகம் ? ஆணுக்கா இல்லை பெண்ணுக்கா?

பெண்ணுக்குத்தான்!

செஸ்ஸிஸ் கூட பெண்ணுக்குத்தான் (ராணி) பவர் அதிகம்!
ஆணுக்கு பவர் கம்மிதான்!

__________________________________________________


கல்யாணம் முடிந்த முதலாண்டில் மனைவியின் பேச்சை
கணவன் கேட்பான்
இரண்டாம் ஆண்டு கணவனின் பேச்சை மனைவி கேட்பாள்

மூன்றாம் ஆண்டில் இருவரின் பேச்சையும் பக்கத்து வீட்டுக்காரர்கள்
கேட்பார்கள்!

------------------------------------------------------------------------------------------

நான் என் கணவனிடம் ரொம்ப நாளா நான் போகாத
இடத்திற்கு என்னை அழைத்துச்செல்லுங்கள் என்றேன்.
அவரும் சரி கண்டிப்பா அழைத்துச்செல்கிறேன்
என்று கூறினார் நான் எங்கே என்று கேட்டேன் *

அவரோ சமையலறைக்குத்தான் என கூறி ''பின்ன நீ
ரொம்ப நாளா போகாத இடம் அதுதானே என்றார்''!

_-----------------------------------------------------------------------------------

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது