உழைக்காமல் உண்ண வேண்டும் என்ற ஆசை பரமார்த்த
குருவுக்கு ஏற்பட்டது.
"அப்படியானால் ஒரு குரங்கைப் பிடித்து வந்து, அதற்குப்
பயிற்சி கொடுக்கலாம். எல்லா பொருள்களையும் திருடிக்
கொண்டு வர கற்றுத் தரலாம்!" என்று யோசனை கூறினான்,
முட்டாள் சீடன்
பிள்ளையாரைப் பிடிக்க, குரங்காக ஆகி விடும் என்பதால்,
அரச மரத்தினடியில் இருந்த பிள்ளையார் சிலை மேல்
விழுந்து அதைக் கட்டிப் பிடித்து உருண்டனர்.
குரங்காட்டியிடமிருந்து தப்பி வந்த குரங்கு ஒன்று யதேச்சையாக
அங்கே வந்தது. சீடர்கள் அதனைப் பிடித்து சென்றனர்.
"நம் குரு மட்டும் அடிக்கடி சுருட்டு பிடிக்கிறார். ஆனால்
அவர் சீடர்களான நமக்கோ ஒரு சுருட்டு கூடத் தருவதில்லை.
அதனால் அவருக்கும் தெரியாமல் சுருட்டு திருடிக் கொண்டு
வரும்படிக் குரங்கை அனுப்புவோம்" என்றான் மட்டி.
"குரங்கே! எங்கள் குரு பிடிப்பதைக் காட்டிலும் உயர்ந்த ரகமான
சுருட்டுகளை எங்கிருந்தாலும் கொண்டு வா!" என்று அதை
ஏவி விட்டான் முட்டாள்.
அடுத்த நிமிடம் குரங்கு மாயமாய் மறைந்தது. ஒரு மணி
நேரத்துக்குப் பிறகு மீண்டும் திரும்பி வந்தது. அதன் இரண்டு
கைகளிலும் நிறைய பட்டாசுகள் இருந்தன. வாணக் கடைக்குச்
சென்ற குரங்கு, அங்கிருந்த பட்டாசுகளைச் சுருட்டு என்று
நினைத்துக் கொண்டு தூக்கிக் கொண்டு வந்து விட்டது.
அதைக் கண்ட மடையன், "சொன்னபடி சுருட்டுகளை
சுருட்டிக் கொண்டு வந்து விட்டதே!" என்று மகிழ்ந்தான்.
"ஆஞ்சநேயா! வாழ்க நீ! வளர்க உன் தொழில், திறமை!" என்றான்,
முட்டாள்.
பல வண்ணங்களில் இருந்த பட்டாசுகளைப் பார்த்து, "நம்
குருநாதர் பிடிக்கும் சுருட்டுகள் புராவும் கருப்பு நிறம் தான்.
நாம் பிடிக்கப் போவதோ, சிவப்பு, பச்சை, நீலம் என்று பல
நிறங்களில் இருக்கின்றன" என்று பெருமைப்பட்டுக் கொண்டான்
மண்டு. பட்டாசுகளில் இருந்த திரியைப் பார்த்த மூடன்,
"நெருப்பு வைப்பதற்காக என்றே தனியாக ஒரு திரி வைத்து
இருக்கிறார்கள் அதனால் இதுதான் உலகத்திலேயே உயர்ந்த
சாதி சுருட்டு" என்றான்.
சீடர்கள் அனைவரும் ஆளுக்கொரு வெடியை வாயில் வைத்துக்
கொண்டனர். எல்லோர் திரிக்கும் கொள்ளிக் கட்டையால் நெருப்பு
வைத்தான், முட்டாள்.
ஆனந்தமாகப் புகை விடலாம் என்ற கற்பனையில் மூழ்கினர்
சீடர்கள்.
அடுத்த கணம், 'டமால், டுமீல்' என்று ஒவ்வொருவர் வாயிலும்
இருந்த பட்டாசு வெடித்தது.
வாய் இழந்த சீடர்கள், "ஐயோ, ஆஞ்சநேயா!" என்று அலறிக்
கொண்டு உருண்டனர்.
நடந்ததைக் கேள்விப்பட்ட பரமார்த்தர், "இனி மேலாவது எனக்குத்
தெரியாமல் எந்தக் காரியத்தையும் செய்யாதீர்கள்" என்று
எச்சரிக்கை செய்தார்.
source: http://hayyram.blogspot.com/2009/03/blog-post_2067.html
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment