சில்லென்ற பனிபடர
தேகம் நனையும் சுகத்தில்
காலை விடிந்தால்
நாளெல்லாம் நாட்டியப் புத்துயிர்!
தெருக்களில்
புழுதி பறக்க
சுகாதாரம் குடியமறும் அழகில்
கண்கள் இளமையாகின்றன..
நீலமும் செம்மையும்
குழைந்த வானத்தில்
நிலவின் நீண்ட பயணம்
பூத்துளியாய் மலர்கின்றன..
இதயத்தில் எவரோ
உற்சாகத்தை ஊட்டி
பூம்பொழில் சலனம்
பாடுவதாய் சிலாகிப்பு..
காலை நேரப் பச்சைக் குளியல்
தாய்மையின் அரவணைப்பு..
உலைகளோடு நீரூற்றிப் பேசும்
பரிபாஷையில் -
நூறு குயில்கள் கூவுகிற சுகம்..
அதிகாலை எழுங்கள்..
அத்தனை சுகமும்
அகத்தில் பிடிபடும்!
************************
- ராசி அழகப்பன்
Thanks:http://www.nilacharal.com/stage/kavithai/tamil_poem_298a.asp
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment