கவிதை வாசல்
********************
நீ மட்டும்...
காற்றின் வருகையை
களிப்புடன் தலைசிலுப்பி
வரவேற்கிறது மரம்...
இதழ்விரித்துப்
புன்னகை பகிர்ந்த பூக்கள்
தங்களை அர்ப்பணிக்கத்
தலையாட்டி அழைக்கின்றன...
இடியையும் மின்னலையும் அனுப்பித்
தனது தலைநீட்டலை
மகிழ்வுடன் அறிவிக்கிறது மழை...
இலைகளை உதிர்த்த
கிளைகளின் முதுகில்
மீண்டும்_
தளிர்களைத் துளிர்த்துக்
கொண்டாடுகிறது வசந்தம்...
எங்கோ உதித்த சங்கீதத்தின் சிறுகீற்று
எல்லோர் காதுகளுக்கும்
சுகஒத்தடம் பரிமாறுகிறது...
ஆடிக்கொண்டே போகும் ஆறு
ஆனந்தமாகக் குதிக்கிறது
பள்ளத்தில்... அருவியாக...
தூறல்களின் சிலிர்ப்பில்
தன்னிச்சையாய் முளைத்த
காளான் குடைகளுக்கு அடியில்
துளிகளை_
ஆர்வமுடன் பருகுகிறது எறும்பு...
*****************
அனலேந்தி
ThANKS:vadakkuvasal.COM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment