இது எங்கள் நேரம்…!



மாற்றம் என்பது மட்டுமே மாறாமல் இருக்கும் என்பதை இன்னொரு தடைவை சொல்லிப் போந்த விடயத்தை அவதானிக்கும் வாய்ப்பு எனக்கு இன்று காலை கிடைத்தது. (அப்படியென்ன உதய தாரகை!! என்னப்பா இப்படியெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கீங்க…??)
வரலாறுகளில் இடம்பெறாத நிகழ்ச்சிகள் எதேச்சையாக அல்லது திட்டமிட்டு நடந்து விடும் போது, அது சாதனையாகிறது. சரித்திரம் படைக்கிறது. மில்லியன் கணக்கானோர் ஒரே தடவையில் ஆனந்தக் கண்ணீர் வடித்த தருணங்களைக் கண்டிருக்கிறீர்களா?. அந்தத் தருணத்தை இன்று காலை கண்ட நேரம் நான் என்னையறியாமலேயே என் கண்கள் நனையக் கண்டேன். அத்தனை மக்களும் அத்தருணத்தை அவர்களின் நேரமாக கருதினார்கள்.
வாழ்க்கையில் மாறுதல்களோ, அழகிய நிலைகள் எய்தப்பட நம்பிக்கை தான் முக்கியம் என்பதை எனது பல பதிவுகளிலும் சொல்லியிருக்கிறேன். அந்த நம்பிக்கையால் மக்கள் பெற்ற ஆனந்தத்தை என்னால் கண்டு கொள்ள முடிந்தது.
ஐக்கிய அமெரிக்காவின் "முதலாவது கருப்பின ஜனாதிபதி" – பராக் ஒபாமா இன்று அமெரிக்க மக்களால் தெரிவு செய்யப்பட்டார். இந்தத் தருணத்தை கேள்வியுற்ற தருணமே என்னையறியாமலேயே எனக்குள் ஒரு மகிழ்ச்சி குடிகொண்டது. "நாம் நம்பும் மாற்றம்" என்பது தான் ஒபாமாவின் பிரச்சார தொனிப்பொருள்.
தனது வெற்றியின் நிறைவில் நாட்டு மக்களை கண்டு அவர் ஆற்றிய உரை கவர்ச்சியானது. காந்த சக்தி கொண்டது. பார்வையாளர்களை அன்பாலும் உணர்வுகளாலும் கட்டிக்கொள்ளக் கூடியது. அந்த வீடியோவை பார்த்து புல்லரித்துப் போனேன். நான் அந்த வீடியோவை பார்த்து நம்பிக்கையின் மூலம் பெறக்கூடிய மாற்றங்களை உணர்ந்து கொண்டேன்.
என்னைக் கவர்ந்த அவரின் வெற்றிவாகை சூடிய பேச்சில் கவர்ந்த சில வரிகளை தருகிறேன்.

"If there is anyone out there who still doubts that America is a place where all things are possible, who still wonders if the dream of our founders is alive in our time, who still questions the power of our democracy, tonight is your answer"

"It’s been a long time coming, but tonight… change has come to America"

"Sasha and Malia, I love you both more than you can imagine, and you have earned the new puppy that’s coming with us to the White House."

“Yes, we can”

"Even as we celebrate tonight, we know the challenges that tomorrow will bring are the greatest of our lifetime - two wars, a planet in peril, the worst financial crisis in a century.
"The road ahead will be long. Our climb will be steep. But America - I have never been more hopeful than I am tonight that we will get there."

“This is our moment”

இது எங்கள் நேரம். மாற்றங்களை நம்புகின்ற நேரம். மக்களை உணர்வுகளால் கட்டிப் போடும் வசனங்கள் தானே.. வாழ்க்கையில் சாதிக்க நம்பிக்கை கொண்டவன் வெற்றி வாகை சூடுவான் என்பதற்கு இதுவுமொரு நிகழ்ச்சிதான்.
- உதய தாரகை

**********************************
Thanks:http://niram.wordpress.com/2008/11/05/this-is-our-moment/

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது