புத்தர்- அறிவுரை

புத்தர் ஒரு நாள் தனது சீடர்களுடன் ஆற்றங்கரைக்கு வந்தார். அப்போது ஒரு யோகி ஆற்றின் மீது நடந்து சென்று ஆற்றை கடந்தார். இதை கண்ட மக்களும் அதிசயித்து போய் யோகியை தொடர்ந்து பலர் சென்று கொண்டிருந்தனர்.

இதைக்கண்ட புத்தரின் சீடர்களில் ஒருவர் “பகவானே, தாங்களும் இது போல் ஏதாவது செய்தால் மக்கள் நம் மீது எளிதாக நம்பிக்கை கொள்வார்கள் அல்லவா ? தங்களையும் பின்பற்றுவார்கள் அல்லவா ? நாம் இவ்வளவு கஷ்டப்படவேண்டியதில்லையே” என்றார்.


இதனைக்கேட்ட புத்த பகவான், அமைதியாக அங்கு இருந்த படகோட்டியிடம், இந்த ஆற்றை கடக்க எவ்வளவு பணம் என்று கேட்டார், அதற்கு அந்த படகோட்டி அரை காசு என்று கூறினார்.

பிறகு, புத்தர் தனது சீடர்களை பார்த்து, “என்னுடைய ஞானத்தையும் போதிநிலையும் அற்பமாக அரைகாசுக்கு விற்றுவிட சொல்கிறீர்களா ? என்னை பின்பற்றுவர்கள் என்னுடைய தர்மத்தை கொண்டே என்னை பின்பற்ற வேண்டும், அவர்களே உண்மையானவர்கள்” என்று அவர்களைப்பார்த்து கூறினார்.

1 comments:

said...

புத்தரின் அறிவுரை
மிகச் சரியானதே


கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது