



--------------------------------------------------------------------------------
தென்மேற்கு சீனாவின் GUI ZHOU மாநிலத்து FAN JING SHAN மலையில் அமைந்துள்ள தேசிய நிலை இயர்கைப் புகலிடம், தற்போது, பொன் நிற குரங்குகள் வாழும் ஒரே ஒரு இடமாக விளங்குகிறது.
அவை, GUI ZHOU பொன் நிற குரங்கு, SI CHUAN பொன் நிற குரங்கு, YUN NAN பொன் நிற குரங்கு என மூவ்வகைப்படுகின்றன. அவற்றில், GUI ZHOU பொன் நிற குரங்குகளின் எண்ணிக்கை, மிகவும் குறைவு. அவை, ஏறக்குறைய 700 மட்டுமே. குறைவான பரப்பில் சிதறி வாழும் இவ்வகை குரங்குகள் மரபற்றப் போகும் நிலையில் உள்ளன.
இதர குரங்குகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், GUI ZHOU குரங்கு, பார்ப்பதற்கு மிகவும் எழிலானது. அதன் மார்பிலும் நான்கு கால்களிலும் உள்ள நீளமான பொன்நிற ரோமம், சூரிய ஒளியில் மினுமினுக்கின்றது. அதன் முகம், நீல நிறத்தில் காட்சியளிக்கன்றது. முதுகு ஈய நிறமுடையது. இரு தோள்களுக்கிடையில் வெள்ளை நிற வரி ஒன்று காணப்படுகின்றது. அதன் மூக்கு, மேல் நோக்கி உள்ளது. நீண்ட வாலும் உள்ளது.
.
முதல் காரணம், இக்குரங்கின் இனப்பெருக்கத்திறன் மந்தமாக உள்ளமையாகும். பெண் குரங்கு கர்ப்பம் கொண்டது முதல், குட்டி ஈனும் வரை பொதுவாக 5-6 திங்கள் காலம் தேவைப்படுகின்றது. தவிர, அது, ஆண்டுதோறும் குட்டி ஈனுவது மில்லை. குரங்கு குட்டிகளின் வாழும் விழுக்காடு குறைவு. இரண்டாவது காரணம், இத்தகைய குரங்கு, உயர்வான வாழ்க்கை சூழலில் வாழ வேண்டும் என்பதாகும். கடந்த பல்லாண்டுகால பராமரிப்பு மூலம், GUI ZHOU பொன் நிற குரங்குகளின் எண்ணிக்கை, தற்போது ஓரளவு அதிகரித்துள்ளது
Source: http://tamil.cri.cn/1/2005/02/06/22@17411_1.htm
0 comments:
Post a Comment