
ஒரு பெருமழைக்குப் பிந்தைய
இரவின் நிசப்தத்தில்
நீ எனக்குப் பரிசளித்தாய்
அந்த வீணையை...
கண்கள் விரித்துப்
பரவசம் காட்டினேன்,
உயிரை ஊடுருவி
ஒரு பார்வை பார்த்தாய்!
தனிமைத் தருணங்களிலெல்லாம்
உன் விருப்பங்கள் மீட்டுவேன்
பிரியம் கொப்புளிக்கக்
காது கொடுப்பாய்
இதயக் கோப்பையில்
நிரம்பி வழிந்தது
நம் காதல்...
இதோ...
நாட்கள் ஓடிவிட்டன
குழந்தைகள் வளர்கிறார்கள்
வாழ்க்கை பயமுறுத்துகிறது
பரணில் கிடக்கும்
நரம்பறுந்த வீணை
சொல்லிக் கொண்டேயிருக்கிறது
என்னை விட்டு
தூரம் போன
உன் நேசத்தை...
தீட்சண்யா
Thanks:
http://www.kumudam.com/magazine/Snegiti/2008-08-16/pg18.php
0 comments:
Post a Comment