எல்லாவற்றையும் நிறுத்தி விடலாம்
எல்லாவற்றையும் நிறுத்திவிடலாம்
மின்னல் மறையும் ஒரு கணத்தில்
அறையைச் சூழ்ந்துகொண்டிருக்கும் கருகல் நெடியை
கண்களில் ஆய்ந்து திரையிடும் இருளை
சுவர்களில் இடும் முத்தங்களை
ஒரு சதுரங்கத்தைவிட்டு நகராத ஓட்டங்களை
ஓயாத மருகுதல்களை
ஏன் ஏன் என்ற கேள்விகளை
‘இந்த வாழ்க்கை.. . .இந்த வாழ்க்கை’ எனக் கசியும்
இந்த வாழ்க்கையினை
எல்லாவற்றையும் நிறுத்திவிடலாம்
ஒலி கடக்கும் ஒரு கணத்தில்
பின் கேட்டுக கொண்டிருக்கலாம்
நிசப்பத்தில் விழுந்து சிதறும்
ஒரு கண்ணாடிக் கோப்பையின்
ரகசியங்களை.
நன்றி; மனுஷ்யபுத்திரன் (மணலின் கதை-கவிதை தொகுப்பு)
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
சத்தமில்லா உலகில் அதிசியங்கள் தொடரும்
Post a Comment