தாய்ப்பால் வாரம்
உலக தாய்ப்பால் வாரம் நாடு முழுவதும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஒருவாரத்திற்கு கடைபிடிக்கப்பட்டுகிறது.இதையொட்டி மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஊட்டச்சத்து வாரியம் சார்பில், தாய்ப்பால் ஊட்டுவதன் அவசியத்தையும், இதனால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதையும் உணர்த்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு ஆதரவு அளிப்பது, தாய்ப்பால் ஊட்டுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டியதும் இதன் முக்கிய நோக்கமாகும்.தாய்ப்பால் குறித்த மேம்பட்ட தகவலை அளித்தல், பொதுவான செயல்பாடுகளை ஊக்குவித்தல் போன்றவையும் இந்த நிகழ்ச்சிகளில் அடங்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Labels:
செய்தி/ விமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
தாய்ப் பாலமுதின் அருமை
பெருமை உணரச் செய்யும் முயற்சி
கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/
Post a Comment