விண்மீன்கள்- [சிறுவர் பாடல்)

அம்மா போட்ட புள்ளிக்கோலம்
போன்ற அழகு விண்மீன்கள் !
இம்மாம் பெரிய உலகத்திலே
யார் இறைத்தார் வைரங்கள் !

மட்டிப் பூவின் கொத்தைப் போல்
மின்மின்கள் கூட்டம்போல்,
எட்டி நின்று கண் சிமிட்டி
யாரை அங்கே அழைத்திடும் !

மேகமூட்டப் புகை மறைத்தும்
மெள்ள எட்டிப் பார்த்திடும் !
பாகு போன்ற இன்பந் தன்னைப்
பிறக்களித்து மகிழ்ந்திடும்.
**************************

கவிஞர் முல்லைவாணண்
நால்; ஊஞ்சல்;

நன்றி; டாக்டர் ஏ ஆர்ஏ சிவமுராரன்-

''சிங்கப்பூர்த் தமிழ்க் குழந்தை இலக்கியம்(திறனாய்வு)'' நூலிலிருந்து

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது