இலக்கு
---------
இலக்கை அடைய இஷ்டப்படு
அதற்காக நாளும் கஷ்டப்படு
தடைகள் வந்தால் தகர்த்திடு
எதிர்ப்புகள் வந்தால் எதிரத்திடு
நீதிநெறி கொண்டு உழைத்திடு
வெற்றியை நோக்கி உயர்ந்திடு
தோல்வியைத் தோற்கடி.
உயர்வு உண்மைக் கல்வெட்டு
பொய்யானால் நீர்மேல் எழுத்து
----------------------------------------------------
கூண்டுக் கிளி
---------------
ஒற்றை நெல் மணிக்காக
ஊருக்கெல்லாம் சீட்டு எடுத்து
எதிர்காலம் சொல்லும் கிளியே
கூண்டை விட்டுச் சுதந்திரமாய்
நீ சுற்றித் திரிய
என்று எடுப்பாய்- சீட்டு.
----------------------------------------------------
காலம்
---------
நல்லது கெட்டது
நேரத்தில் இல்லை
நல்லவன், கெட்டவன்
பிறக்கையில் இல்லை
நெல்மணி ஆளைப்
பார்த்து உணவு ஆவதில்லை
தாயாராகும் இடத்தில் இல்லை கருப்பு,
வெள்ளைப் பணம்
பஞ்ச பூதங்கள் பாகு பாடு பார்ப்பதில்லை
தெயவத்தின் முன் பேதம் இல்லை
கடமையை மட்டும் செய் கண்ணே!
காலம் எல்லாம் நல்ல நேரம்தான் உனக்கு!
--------------------------------------------------------
நகைப்பூ
--------------
விருந்தை முடித்து
தாம்பூலம் தரித்து
இரவல் நகையில் ஜொலித்து
புகைப்படத்துக்குப் புன்னகைத்து
உறவில் பல கதை பேசி
உள்ளூர மனம் வெந்து
விடை பெற்று வருகையில்
பரிசைத் தர மறந்து விட்டோம்
என மகன் சொன்னான்
தெரிந்தே மறந்தது
அவனுக்கு எப்படித் தெரியும்.
-----------------------
>சு.வேதா இராமன்
வானமே எல்லை -கவிதை தொகுதி
மணிமேகலைப் பிரசுரம்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment