ஜோசியம்

ஜோசியம்

கிளியின்
துளிநிமிட விடுதலை,
அளிக்கப்படும் அரிசி
ஆகியன எண்ணி…
அடுக்கப்பட்டிருக்கும்
அட்டைகளிலொன்றில்
எனது மிச்ச வாழ்விற்கான
சூத்திரமிருப்பதாய் நம்புகிறேன்.

- அருண் வைத்யநாதன்

நன்றி; arunhere.com/pathivu

அரவணைப்பு -

அரவணைப்பு


**********************

கருவுக்குள் இருந்து
காளையாய் வளரும் வரை
தாயின் அரவணைப்பு.
அவளுக்கோ
இன்று முதியோர் இல்லமே அரவணைப்பு

*******************************************
கவிஞர்.கீதாலட்சுமி


நன்றி; http://tamilwriters.com/Kavithaigal/kavithaikal/Geetha5.htm

முரண்பாடு ! ____________

முரண்பாடு
____________

>மது வாங்க 'காந்தி' உதவுகிறார்

>ஆம் !

>பண நோட்டுகளில்

>மகாத்மா படம் !

*****************************
மு.மாரிமுத்து
பாக்யா ஜூலை 18-24,1999
மறக்க முடியாத சில ‘இல்லை’கள்
______________________________

>ஆசைக்கு நிகரான நெருப்பு இல்லை

>பகைமைக்கு நிகரான பாவம் இல்லை

>நோய்க்கு நிகரான உடல் துன்பம் இல்லை

>அன்பின்மைக்கு நிகரான மனத்துன்பம் இல்லை

>துவேஷத்துக்கு நிகரான சித்திரவதை இல்லை

அன்புக்கு நிகரான இன்பம் ஏதுமில்லை

*******************************************

பகவான் புத்தர்

பலன்

பலன்

>உச்சி வெயிலில்
>தவமிருந்து
>வயதிழந்து
>இன்றுதான்
>புத்தி வந்தது
>வேலை வாய்ப்பு
>அலுவலக வாசலில்
>என் சர்பத் ஸ்டால் !
*****************************

ஆக்கம்; அண்ணா அன்பழகன்
பாக்யா 3-10 97 இதழ்

ழ - உச்சரிப்பு !

'ழ' உச்சரிப்பு
அழகாய் வருகிறது
குடிகாரனுக்கு !


சு.கணேஷ்குமார்,வேளச்சேரி
*****************************************

பாடல் !

நாற்று நட
வயல்வெளி
இல்லையென்றாலும்
பரவாயில்லை. . . .
யாராவது பாடுங்களேன்
முழு நடவுப்பாடலொன்றை !

எஸ்.சங்கர், திருப்பரங்குன்றம்

***************************************
புழுக்கம்

வெளியே மழை
மனதினுள் புழுக்கம்
ஐஸ் வியாபாரி !

சு.கணேஷ்குமார்,வேளச்சேரி

****************************************

வாசகர் கவிதை - குமுதம் 10-12-08

குமுதம் (ஜோக்ஸ்)

உன் மார்புல ஸ்டெதாஸ்கோப்பை வச்சிப் பார்த்துட்டு

டாக்டர் என்ன சொல்றாரு ?’’

‘’சளியின் ஓசை’ ன்னாரு !’’
********************************************************************************

‘’குத்தப்பாட்டுல நடிக்க கால்ஷீட் குடுத்துட்டு இப்போ மாட்டேன்னு

சொல்றீங்களாமே….!’’

‘’பின்னே குத்துப்பாட்டுன்னு, நடுவுல மூக்கலயில்ல குத்துறாங்க…!’’

*******************************************************************************

‘’இந்த தியேட்டர் ஸ்டால்ல எதையும் வித்தியாசமா செய்வாங்களாமே !’’

‘’ஆமாம் ! குசேலன் படம் ஓடும்போது, பாப்கார்னுக்குப் பதிலா பாக்கெட்ல

அவல் விற்கப் போறாங்களாம் !’’

************************************************************************************

குட்டி மு.வெங்கடேசன்

நன்றி; குமுதம்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது