காணி நிலம் வேண்டும் - பராசக்தி
காணி நிலம் வேண்டும், - அங்கு
தூணில் அழகியதாய் - நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் - அந்தக்
காணி நிலத்தினிடையே - ஓர்மாளிகை
கட்டித் தரவேண்டும் - அங்கு
கேணியருகினிலே - தென்னைமரம்
கீற்று மிளநீரும்.
பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம்
பக்கத்திலே வேணும் - நல்ல
முத்துச் சுடர்போலே - நிலாவொளி
முன்பு வரவேணும்,
அங்கு கத்துங் குயிலோசை - சற்றே
வந்து காதிற் படவேணும், - என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்
தென்றல் வரவேணும்.
பாட்டுக் கலந்திடவே - அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும் - எங்கள்
கூட்டுக் களியினிலே - கவிதைகள்
கொண்டுதர வேணும் - அந்தக் காட்டு
வெளியினிலே - அம்மா!
நின்றன் காவலுற வேணும், - என்றன்
பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.
************
பாரதியார்
ஹைகூ -பொன்.சுதா
ஓய்வெடுக்க வந்தாலும்
மறக்கவில்லை
நகரத்து வேகநடை.
************
நானும் ஆதாம் தான்
துரத்திய சொர்க்கம்
தாய் வயிறு..
**************
மின்சாரம் போனதும்
கூடுகிறது ஒளி
நடசத்திரங்களுக்கு.
************
கூட்டத்தில் எது
நேற்று முகம் மோதிய
வண்ணத்துப் பூச்சி…
****************
பெரும் மழை
இரவெல்லாம் நனைந்தேன்
பழைய மழையில்.
***************
தொலைந்து போனது
நிறைந்த கம்மாயில்
விளையாட்டு மைதானம்
*************
வயிறு கிள்ளும் பசி
கூட்டமாய் இருக்கிறது
குழாயடி.
************
துயிலெழுப்பிக் கொடுக்கிறான்
பால்காரன் தினமும்
உதயக் காட்சி
***********************************************************************************************************************
ஆக்கம்; பொன்.சுதா,
நன்றி;ponsudhaa.wordpress.com

Labels:
கவிதை
ஓம்காரம்
ஓம்கார நாதத்தின் உச்சரிப்பு பற்றி பதஞ்சலி தன் யோக சூத்திரத்தில் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாமா?
ஓ+ம் = ஓம்
’ஓ’ வின் உச்சரிப்பு குறைவாகவும், ‘ம்’ இன் உச்சரிப்பு நீண்டாதகவும் இருக்க வேண்டும்.
ஓம், ஓம், ஓம்,… என்று தொடர்ந்து உச்சரிக்க வேண்டும். சப்தமாக உச்சரிப்பதைக் காட்டிலும், மனதிலேயே உச்சரித்தல் நலம்.
ஓ என்று தொடங்கும்போது மனதில் தங்களுக்கு ஒரு இஷ்ட தேவதையோ அல்லது வேறு எந்த ஒரு பொருளையோ நினைக்க துவங்கிக் கொண்டால், ’ம்’ இல், அந்த நினைவினை தொடர வேண்டும்.
இதோடு சேர்ந்து நாசிப்பயிற்சியும் செய்தால் மேலும் பயனுண்டு.
மூச்சை உள்ளிழுக்கும் போது, மனதில் ‘ஓ’ வைத் துவக்கிக்கொண்டவாறு, தாங்கள் தேர்வு செய்த பொருளை மனத்தில் இருத்திக்கொள்ள வேண்டும்.
அடுத்து மூச்சை வெளி விட்டவாறு ‘ம்’ மைத் தொடரவேண்டும். எண்ணத்திலும் நிலைநிறுத்திய பொருளை தொடர்ந்தவாறு.
இவ்வாறு தொடர்ந்து பயிற்சி செய்தால், வெகு சீக்கிரமாக தாங்கள் எண்ணத்தில் நிறுத்திய பொருள் அல்லது இஷ்ட தேவதையினை மனதில் ஒருமுகப்படுத்தும் சித்தி கிடைக்கும். வேறு மாற்று சிந்தனைகள் ஏற்பட்டு மனதை அலைக்கழிக்கவிடாமல் நெருங்கிய பொருள் கைக்கிடைக்கும். அந்த நெருங்கிய பொருள் நீங்கள் யாரென்ற தன்னறிவானால், மீளாத் துயர்களில் இருந்து விடுதலை பெறும் பாதை உங்கள் கையில்!
****************
நன்றி;http://arull.wordpress.com/

ஆன்மீகம்
மூத்தோர் சொல் அமிர்தம்
கண்டனத்தைக் தாங்கிக் கொள்ளும் திடமனம் இல்லையென்றால் கடமையை
நிறைவேற்ற முடியாது. - காண்டேகர்
உயர்வு என்பது ஊக்கத்தின் அளவைப் பொறுத்ததே - மாத்யூஸ்
பொய்த் தோற்றங்களால் கவரப்படும் மனம் நல்ல விஷயங்களில் சுவை
காணாது- ஹொரேஸ்
எதற்கெடுத்தாலும்,’கடவுளே,கடவுளே!’ என்றழைப்பதைவிட உங்கள்
பணியை ஒழுங்காகச் செய்து முடியுங்கள்- ப்ராங்ளின்
திருப்தி இயற்கையான செல்வம், சொகுசான வாழ்வு செயற்கையான
வறுமை - சாக்ரடீஸ்
சந்தேகம் என்றொரு கோட்டையின் அதிருப்தியே அவநம்பிக்கை –
ஜான் பன்யன்
உண்மை,வீரம் எங்கு இருக்கிறதோ, அங்கு அடக்கமும் மிகுந்திருக்கும—
வில்லியம்.

அனுபவம்
சர்தார்ஜி ஜோக்ஸ்
வேகமாக காரோட்டியதற்காக சர்தார் தடுத்து நிறுத்தப்பட்டார்.
" அதிக வேகம் 50 கி.மீ ன்னு போட்டிருக்கே பார்க்கலியா..?"
" இல்லையே... 70 ன்னு தானே எல்லா எடத்திலேயும் போட்டிருக்கு.."
" யோவ்... அது Nh 70. இந்த நெடுஞ்சாலையோட பேரு.. சரி பொழைச்சு போ..
சிங்குங்கறதாலே சும்மா விடறேன்.. சரி ஏன் உங்க வீட்டுக்காரம்மா இப்படி
பேயறைஞ்சது மாதிரி வியர்த்துப் போய் உக்காந்து இருக்கு..?"
" கொஞ்சம் முன்னாலே Nh 140 லே வந்தேன்... அதான்
****************
ஒரு சர்தார் வீடு கட்டிக் கொண்டிருந்தார்.. அவரே தச்சு வேலையும்
செய்தார்.. ஒரு சன்னலைப் பொறுத்துவதற்காக ஆணி அடித்துக் கொண்டிருந்தார்.
அவ்வாறு செய்யும்போது... சில ஆணிகளை அடிப்பார்..சிலவற்றை தூக்கிப்
போட்டுவிடுவார்.. இதைக் கவனித்துக் கொண்டிருந்த நண்பர் கேட்டார்..
" இந்த ஆணியெல்லாம் நல்லாதானே இருக்கு.. ஏன் தூக்கிப் போட்டுட்டே..?
" முட்டாள்.. நல்லா பாரு.. கூர் முனை என் பக்கம் இருக்கற ஆணியா இருந்தா
எப்படி அடிக்க முடியும்..? கொண்டைப் பக்கம் என்னை நோக்கி இருந்தால் தானே
அடிக்க முடியும்..?
" ஹா... ஹா... இதுக்குதாண்டா நாமன்னா எல்லாரும் ஏளனம் பண்றாங்க.. அறிவு
கெட்டவனே.. கூர் முனை நம்ம பக்கம் இருந்தா அதெல்லாம் சுவற்றுக்கு அந்தப்
பக்கம் அடிக்கிற ஆணி..அதை வீட்டுக்கு உள்பக்கம் அடிக்க வேண்டியது தானே..
ஏன் தூக்கி போடறே..??!!!
*****************

நகைச்சுவை
உண்மைக்குப் பரிசு-புஷ்பவனம் குப்புசாமி
புஷ்பவனம் குப்புசாமியின் சிறுவர் பாடல்கள்
உண்மைக்குப் பரிசு
*************************
உண்மை பேசினால் நன்மைகளுண்டு
விறகு வெட்டி கதை கேளுங்கள் !
விறகு வெட்டியின் நேர்மைக்காகக்
கிடைத்த பரிசினைப் பாருங்கள் !
காட்டுக்குள்ளே ஆற்று ஓரமாய்
பட்ட மரமொன்று இருந்தது !
பட்ட மரத்தை வெட்டும்போது
கோடரி ஆற்றுக்குள் விழுந்தது !
கோடரி இன்றித் தவித்த ஏழையிடம்
தேவதை ஒன்று வந்துது !
தங்கக் கோடரி ஒன்றை எடுத்து
விறகு வெட்டியிடம் தந்தது !
தங்க கோடரி,வெள்ளிக் கோடரி
எதையும் மரம் வெட்டித் தொடவில்லை !
இரும்புக் கோடரி தன்னது என்று
எடுத்துக் கொண்டான் பொய்யில்லை !
விறகு வெட்டியின் நேர்மை கண்டு
தேவதை உள்ளம் மகிழ்ந்தது !
வெள்ளிக் கோடரி தங்கக் கோடரி
எல்லாம் பரிசாய்த் தந்தது.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
ஆக்கம்; புஷ்பவனம் குப்புசாமி
புஷ்பவனம் குப்புசாமியின் சிறுவர் பாடல்கள்
(மணிமேகலைப் பிரசுரம்)

மனிதன்
பத்துப் பசுக்களை எடுத்து ஆராய்ந்து பார்த்தால் பத்துப் பசுக்களிடமும் பசுவின் குணத்தையே காணலாம்...
பத்துப் புலிகளை எடுத்து ஆராய்ந்து பார்த்தால் பத்துப் புலிகளிடமும் புலியின்; குணத்தையே காணலாம்...
பத்துப் சிங்கங்களை எடுத்து ஆராய்ந்து பார்த்தால் பத்துப் சிங்கங்களிடமும்; சிங்கத்தின் குணத்தையே காணலாம்...
ஆனால் பத்து மனிதர்களை எடுத்து ஆராய்ந்து பார்த்தால் பத்து மனிதரிலும் மனிதனின் குணத்தை காணமுடியாது. பசுவைப் புலியாக்க முடியாது. புலியை பசுவாக்க முடியாது. சிங்கத்தை மனிதனாக்க முடியாது. ஆனால் மனிதன் புலியாகலாம், சிங்கமாகலாம், பசுவாகலாம், விரும்பினால் மனிதனாகவோ அல்லது தேவனாகவோ வாழலாம்..
*************
(படித்ததில் பிடித்தது)

அனுபவ மொழிகன்
Subscribe to:
Comments (Atom)