நமீதா நீதிபதியா இருந்தால். . .

இந்த வழக்கைப்பற்றி நீ என்ன சொல்ல விரும்புகிறாய்?

இந்த கேசுக்கு நமீதா நீதிபதியா இருந்தா நல்லா
இருக்கும் எசமான் !

(எஸ்.சங்கர், திருப்பரங்குன்றம்)
------------------------------------------------------------------------------------------------------------------------


கபாலி, குற்றம் சரிவர நிரூபிக்கப்படாததால் உன்னை
விடுதலை செய்கிறேன்.

நிரூபிக்க முடியாத அளவுக்கு செஞ்சிருக்கேன்.ஒரு
பாராட்டு தெரிவிக்கணும்னு தோணாதே உங்களுக்கு!

(தே.ராஜாசிங் ஜெயக்குமார், தஞ்சாவூர்)

ஏட்டய்யா... களவு மூன்றெழுத்து, கடமை மூன்றெழுத்து,
தொழில் மூன்றெழுத்து. . . இது எப்படி இருக்கு ?

இத பாரு கபாலி …
மாமூல் கூட மூன்றெழுத்துதான்.மறந்துடாதே!

(வி.எம்.செய்யது புகாரி, அதிராம்பட்டினம்)





நன்றி; குங்குமம்

மரம் நடு விழா

மரம் நடுவிழா;
அரசு அலுவலகத்தில் மரம் நடுவிழா
ஆரவாரமின்றி கலந்து கொண்டார் மேலாளர்
ஆழ குழி தோண்டி பொறுப்புடன் நட்டார்
‘தூங்குமூஞ்சி’ மரக்கன்றினை!

சி.ரகுபதி,போளூர்

சுமைகள்;
புத்தகச் சுமை பிள்ளைகளுக்கு
பள்ளி கட்டண சுமையோ
பெற்றோர்களுக்கு !

சேகுவேரா-செரியலூர்


மீண்டும் வருமா ?
வானவில்லாய் வந்து மறைந்த சுதந்திரம்
மீண்டும் எப்போது வரும்
ஏழைகளின் வறுமையைப் போக்க..

த.பக்தவச்லம்,ஆற்காடு.!

அன்றும் இன்றும். . .
மரங்களை வைத்து மழை பொழிய வைத்த
மன்னர்கள் அன்று. . .
மரங்களை வெட்டி மழை ஒழிய வைத்த
மாமன்னர்களோ இன்று !

கம்பன், மதுரை

குடி !
எப்போதும் சந்தோஷ போதையில்
இருக்க வேண்டும் என்றால்
சிரிப்பெனும் மதுவைக்
முடித்துக்கொண்டே இரு !

வாணிராஜன்,சென்னை 117

நன்றி; தினத்தந்தி இளைஞர் மலர் 28-6-08

மான் விழி மயங்குது !


இதழில் கதை எழுதும் நேரம் இது, இன்பங்கள் அழைக்குது ஆ... மனதில் சுகம் மலரும் மாலை இது, மான் விழி மயங்குது ஆ....

கொத்தும் கிளி இங்கிருக்க

பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ துள்ளி வரும் வெள்ளலையே நீ போய் தூது சொல்ல மாட்டாயோ
கொத்தும் கிளி இங்கிருக்க கோவைப் பழம் அங்கிருக்க தத்தி வரும் வெள்ளலையே நீ போய் தூது சொல்ல மாட்டாயோ தத்தி வரும் வெள்ளலையே நீ போய் தூது சொல்ல மாட்டாயோ இளம் வாழைத் தண்டாக எலுமிச்சம் கொடியாக ஈர வலைக் கைப் பிடிச்சு இரவெல்லாம் கண் முழிச்சு இல்லாத ஆசையிலே என் மனச ஆடவிட்டான் ஆடவிட்ட மச்சான ஓடம் விட்டு போனானே ஒடம் விட்டு போனானே ஓடம் விட்டு போனானே ஊரெங்கும் தூங்கையிலே நான் உள்மூச்சு வாங்கயிலே ஓசையிடும் பூங்காற்றே நீதான் ஓடிப் போய்ச் சொல்லிவிடு
மின்னலாய் வகிடெடுத்து மேகமாய்த் தலைமுடித்து பின்னலாய் ஜடை போட்டு என் மனச எடை போட்டு மீன் புடிக்க வந்தவள நான் புடிக்கப் போறேனே மை எழுதும் கண்ணாலே பொய் எழுதி போனாளே ஆசைக்கு ஆசை வச்சேன் நான் அப்புறந்தான் காதலிச்சேன் ஹோய் ஓசையிடும் பூங்காற்றே நீதான் ஓடிப்போய் சொல்லிவிடு
வாழைப்பூ திரியெடுத்து வெண்ணையிலே நெய்யெடுத்து ஏழை மகக் குடிசையிலே ஏத்தி வச்சான் ஒரு விளக்கு ஏத்தி வச்ச கைகளிலே என் மனச நான் கொடுத்தேன் நெஞ்சு மட்டும் அங்கிருக்க நான் மட்டும் இங்கிருக்க நான் மட்டும் இங்கிருக்க...நான் மட்டும் இங்கிருக்க
தாமரை அவளிருக்க இங்கே சூரியன் நானிருக்க சாட்சி சொல்லும் சந்திரனே நீதான் ஓடிப்போய் தூது சொல்லு பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ சாட்சி சொல்லும் சந்திரனே நீ தூது சொல்ல மாட்டாயோ ---------------------------------------------------------------------------­-------------------------------------------------------- படம்; படகோட்டி (கேட்டு ரஸித்த பாடல்)

சிம்பு-நயன்தரா-சந்திப்பு !


சிம்பு-நயன்தாரா மறுபடியும் பார்க் ஓட்டலில் சந்தித்தார்கள். சிறிது நேரம் தங்கள் கேரியர் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்!! நயனும் சிம்புவும் சில நிமிடங்கள் ஒருவருக்கொருவர் குசலம் விசாரித்தார்களாம். பின்னர் நடித்துக் கொண்டிருக்கும் படங்களின் சூட்டிங் பற்றியெல்லாம் தகவல்கள் பகிர்ந்து கொண்டார்களாம். முக்கியமாக நயனின் புதிய செல்போன் நம்பரை வாங்கிக் கொண்டாராம் சிம்பு.

கண்ணாடி அழகு


நயன்தாரா


இன்றைய தேதியில் நடிகைகளில் நயன்தாராவுக்கே டிமாண்ட் அதிகம். குசேலன், ஏகன், சத்யம், வில்லு என எல்லாமே முன்னணி படங்கள், முன்னணி நடிகர்கள். லிங்குசாமி தயாரித்து இயக்கும் படத்திலும் நயன்தாராவே நாயகி. இவருடன் நடிப்பது கார்த்தி

இந்தப் படத்துக்காக நயன்தாராவுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம்.
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது