. . . அண்ணன் படித்து முடித்து
அட்டை கிழிந்த புத்ததகம்
நேருவின் முகத்தில் மீசை
காந்தியின் நெற்றியில் நாமம்
மெளண்ட்பேட்டன் பிரபு ?
என்பதை அடித்து
மெளண்பேட்டன் அடிமை
என்று எழுதியிருக்கிறான் அண்ணன்.
தன் கற்பனைக்கு இடமில்லாததால்
புத்தகத்தை தூக்கி சுவற்றில் எறிந்து,
நிமிர்ந்து பார்க்கும் நாயை
எட்டி உதைக்கறான் தம்பி !
''தம்பியாய் இருப்பதன் கஷ்டம்
தம்பிக்குத்தான் தெரியும்''
என்று தனக்குள் சொல்லியபடி
வாலாட்டுகிறது நாய்''
நன்றி; நா.முத்துக்குமார் (குமுதம் 25.10.04))
கற்றதும் விற்றதும்
பட்டம் பெற்றோம்
படிப்பு தொலைத்தோம்
சட்டம் கற்றோம்
ஒழுங்கு தொலைத்தோம்
சரித்திரம் பயின்றோம்
சத்தியம் தொலைத்தோம்
வசதிகள் பெற்றோம்
வாழ்வு தொல்த்தோம்.
கல்வியைக் கற்றோம்
கண்ணியம் விற்றோம்
கற்பனை பெற்றோம்
கவிதையை விற்றோம்
இன்பம் பெற்றோம்
இதயம் விற்றோம்
இலக்கியம் கற்றோம்
மொழியினை விற்றோம்.
காசுகள் பெற்றோம்
கடமையை விற்றோம்
காதலைப் பெற்றோம்
கற்பினை விற்றோம்
காணிக்கை பெற்றோம்
கடவுளை விற்றோம்
கண்களைப் பெற்றோம்
ஒளியினை விற்றோம்.
உறவுகள் இருந்தும்
அந்நியர் ஆனோம்
உரிமைகள் இருந்தும்
ஊமைகள் ஆனோம்
ஆளுமை வந்தும்
ஊழியர் ஆனோம்
ஆடை அணிந்தும்
நிர்வானம் ஆனோம்.
வெளிச்சம் வந்தும்
இருள் விலகவில்லை
அறிவு வந்தும்
அறியாமை விலகவில்லை
சூரியன் வந்தும்
சோம்பல் தீரவில்லை
சதந்திரம் வந்தும்
அடிமைகள் மாறவில்லை.
நன்றி; கவியரசு இ.முத்துராமலிங்கம்
(சுட்ட பழம் - பூம்புகார் பதிப்பகம் )
படிப்பு தொலைத்தோம்
சட்டம் கற்றோம்
ஒழுங்கு தொலைத்தோம்
சரித்திரம் பயின்றோம்
சத்தியம் தொலைத்தோம்
வசதிகள் பெற்றோம்
வாழ்வு தொல்த்தோம்.
கல்வியைக் கற்றோம்
கண்ணியம் விற்றோம்
கற்பனை பெற்றோம்
கவிதையை விற்றோம்
இன்பம் பெற்றோம்
இதயம் விற்றோம்
இலக்கியம் கற்றோம்
மொழியினை விற்றோம்.
காசுகள் பெற்றோம்
கடமையை விற்றோம்
காதலைப் பெற்றோம்
கற்பினை விற்றோம்
காணிக்கை பெற்றோம்
கடவுளை விற்றோம்
கண்களைப் பெற்றோம்
ஒளியினை விற்றோம்.
உறவுகள் இருந்தும்
அந்நியர் ஆனோம்
உரிமைகள் இருந்தும்
ஊமைகள் ஆனோம்
ஆளுமை வந்தும்
ஊழியர் ஆனோம்
ஆடை அணிந்தும்
நிர்வானம் ஆனோம்.
வெளிச்சம் வந்தும்
இருள் விலகவில்லை
அறிவு வந்தும்
அறியாமை விலகவில்லை
சூரியன் வந்தும்
சோம்பல் தீரவில்லை
சதந்திரம் வந்தும்
அடிமைகள் மாறவில்லை.
நன்றி; கவியரசு இ.முத்துராமலிங்கம்
(சுட்ட பழம் - பூம்புகார் பதிப்பகம் )
Labels:
படித்ததில் பிடித்தது- கவிதை
பொய் சத்தியம்
கன்னி ஒருத்தியிடம்
முத்தம் ஒன்று நான் கேட்டேன்
அவளோ முதலில் சத்தியம் செய்
பின் பார்ப்போம் என்றாள்.
''சொர்க்கத்தின் மீது சத்தியம்'' என்றேன்
''அது எட்டாத உயரத்தில்'' என்றாள். ''கடலின் மீது சத்தியம்'' என்றேன்
''அது ஆழம் அதிகம் ''என்றாள்.
''கோயிலின் மீது சத்தியம்'' என்றேன்.
''அது வெறும் கல்லும் சுண்ணாம்பும்தானே'' என்றாள்.
''சாமி சிலை மீது சத்தியம்'' என்றேன். அது வர்ணம் பூசப்பட்ட பொம்மைதானே என்றாள்.
சரி,என் இளமையின் மீது சத்தியம் என்றேன்.
''போய்யா ! பொய்யன் நீ '' என்றாள் !
நன்றி' கிரேக்க காதல் கவிதைகள் -
(மொழி பெயர்ப்பு-கவிஞர் ராஜ்ஜா)
முத்தம் ஒன்று நான் கேட்டேன்
அவளோ முதலில் சத்தியம் செய்
பின் பார்ப்போம் என்றாள்.
''சொர்க்கத்தின் மீது சத்தியம்'' என்றேன்
''அது எட்டாத உயரத்தில்'' என்றாள். ''கடலின் மீது சத்தியம்'' என்றேன்
''அது ஆழம் அதிகம் ''என்றாள்.
''கோயிலின் மீது சத்தியம்'' என்றேன்.
''அது வெறும் கல்லும் சுண்ணாம்பும்தானே'' என்றாள்.
''சாமி சிலை மீது சத்தியம்'' என்றேன். அது வர்ணம் பூசப்பட்ட பொம்மைதானே என்றாள்.
சரி,என் இளமையின் மீது சத்தியம் என்றேன்.
''போய்யா ! பொய்யன் நீ '' என்றாள் !
நன்றி' கிரேக்க காதல் கவிதைகள் -
(மொழி பெயர்ப்பு-கவிஞர் ராஜ்ஜா)
Labels:
படித்தில் பிடித்தது-கவிதை
குடையில் கேட்ட பேச்சு
1) குளம்
முகம் பார்க்கும் நிலா
குளிக்காமல் திரும்பினேன்.
2) தண்ணீர் தெளிக்க வந்தேன்
தாமதிக்கச் செய்தன
வரிசையாய் எறும்புகள்.
3)காய்ந்த சருகுகளில்
சங்கீதம்
பழமொழிகள்.
4)சாய்வதற்கு மனசில்லை
நாற்காலி உரையில்
சிரிக்கும் குழந்தை.
5)நேற்று பனைமரம்
இன்று பாலம்
பாவம் மனிதர்கள்.
6)மழை வலுத்த பாதையில்
ஆறுதலாய் இருந்தது
குடையில் கேட்ட பேச்சு.
7)மண் விளக்குகளை அணையுங்கள்
மொனமாய் இரசிக்கலாம்
நிலா நிழல்.
8)தலை முறை கோபம்
அடிவிழ அடிவிழ
அதிரும் பறை.
நன்றி; கவிஞர் மித்ரா (குடையில் கேட்ட பேச்சு )
முகம் பார்க்கும் நிலா
குளிக்காமல் திரும்பினேன்.
2) தண்ணீர் தெளிக்க வந்தேன்
தாமதிக்கச் செய்தன
வரிசையாய் எறும்புகள்.
3)காய்ந்த சருகுகளில்
சங்கீதம்
பழமொழிகள்.
4)சாய்வதற்கு மனசில்லை
நாற்காலி உரையில்
சிரிக்கும் குழந்தை.
5)நேற்று பனைமரம்
இன்று பாலம்
பாவம் மனிதர்கள்.
6)மழை வலுத்த பாதையில்
ஆறுதலாய் இருந்தது
குடையில் கேட்ட பேச்சு.
7)மண் விளக்குகளை அணையுங்கள்
மொனமாய் இரசிக்கலாம்
நிலா நிழல்.
8)தலை முறை கோபம்
அடிவிழ அடிவிழ
அதிரும் பறை.
நன்றி; கவிஞர் மித்ரா (குடையில் கேட்ட பேச்சு )
Labels:
படித்ததில் பிடித்தது-ஹைகூ
நீ அவல் கொண்டு வா
பாற்கடலிலிருந்து லக்ஷ்மி வந்தாள்.
ஐராவதம் வந்தது. உச்சிஸ்வரஸ் வந்தது. ஆலகால விஷம் வந்தது. கடைசியில் அமிர்தமும் வந்தது.
யானையையும் குதிரையையும் இந்திரன் எடுத்துக்கொண்டான்.
லக்ஷ்மியை விஷ்ணு மார்பில் வைத்துக்கொண்டார்.
சிவனுக்கு விஷம் பங்காயிற்று. தேவர்களுக்கு அமிர்தம்.
கூடக்கடைந்த அசுரர்கள் ஏமாந்து போனார்கள்.ஏனெனில்
தேவர்கள் நல்லவர்கள்.அசுரர்கள் கெட்டவர்கள். 'அளவு கோல்' தேவாதி தேவனுடையது.
நீ அவல் கொண்டு வா- நான் உமி கொண்டு வருகிறேன்.
கலப்போம்.நீ ஊது. நான் தின்கிறேன்.
இந்த அநியாயம் அன்றிலிருந்தே வழங்கி வருகிறது.
நன்றி; லா.ச.ராமாமிர்தம் ( பாற்கடல்-நாவல் )
ஐராவதம் வந்தது. உச்சிஸ்வரஸ் வந்தது. ஆலகால விஷம் வந்தது. கடைசியில் அமிர்தமும் வந்தது.
யானையையும் குதிரையையும் இந்திரன் எடுத்துக்கொண்டான்.
லக்ஷ்மியை விஷ்ணு மார்பில் வைத்துக்கொண்டார்.
சிவனுக்கு விஷம் பங்காயிற்று. தேவர்களுக்கு அமிர்தம்.
கூடக்கடைந்த அசுரர்கள் ஏமாந்து போனார்கள்.ஏனெனில்
தேவர்கள் நல்லவர்கள்.அசுரர்கள் கெட்டவர்கள். 'அளவு கோல்' தேவாதி தேவனுடையது.
நீ அவல் கொண்டு வா- நான் உமி கொண்டு வருகிறேன்.
கலப்போம்.நீ ஊது. நான் தின்கிறேன்.
இந்த அநியாயம் அன்றிலிருந்தே வழங்கி வருகிறது.
நன்றி; லா.ச.ராமாமிர்தம் ( பாற்கடல்-நாவல் )
Labels:
படித்ததில் பிடித்தது
Subscribe to:
Comments (Atom)



