ஆதிசங்கரர் அருளியது

ஆதிசங்கரர் கேள்வி-பதில் பாணியில் அருளியவை
சில இங்கே . . .
எது இதமாதனது ? - தர்மம்

நஞ்சு எது ? -பெரியவர்களின் அறிவுரைகளை
அவமதிப்பது
மதுவைப்போல் மயக்கத்தை உண்டு பண்ணுவது
எது ? -பற்றுதல்.
எதிரி யார் ?- சோம்பல்.
எல்லோரும் பயப்படுவது எதற்கு?
இறப்புக்கு.
குருடனை விட குருடன் யார் ?
ஆசைகள் உள்ளவன்.
எது துக்கம் ?
மன நிறைவு இல்லாமல் இருப்பது.
எது இன்பம் தரும் ?
நல்ல மனதுடையவர்களின் சிநேகிதம்.
இறக்கும் வரை உறுத்துவது எது ?
ரகசியத்தில் செய்த பாவம்.
யாரை விபத்துகள் அணுகாது ?
மூத்தோர் சொல் கேட்டு நடப்பவனையும்
அடக்கமடையவனையும்.

courtesy: dinamani.com

மர்லின் மன்றோ

1926 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்தவர் மர்லின் மன்றோ.

மர்லின் மன்றோவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. The most Beautiful lady என்று வர்ணிக்கப்பட்டவர். வெற்றிகரமான நடிகை என்று அழைக்கப்பட்ட போதிலும் இவரது வாழ்க்கை பல ஆச்சரியங்கள் நிறைந்தது. மிகவும் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து மேற்கத்திய படவுலகின் முடிசூடா ராணியாக திகழ்ந்தவர் மர்லின் என்ற நோர்மா.

தனது 36 வது வயதில் மிகவும் மர்மமான முறையில் இவர் இறந்தார். இவரது வீட்டின் பணிப்பெண்ணால் இவரது உடல் படுக்கை அறையில் கண்டுபிடிக்கப்பட்டது. அளவுக்கு அதிகமான தூக்கமாத்திரையால் இவர் இறந்தாக காரணங்கள் சொல்லப்பட்டாலும்,இவரது மரணம் இன்னும் மர்மம் நிறைந்தாகவே கருதப்படுகிறது.

அப்படியும் இப்படியும்

ஆங்கிலத்தில் LIVE என்று கூறப்படும் சொல்,
வாழ்வையும் புத்துணர்ச்சியையும் குறிக்கிறது.
அதே வார்த்தையை பின்னோக்கி EVIL என்று
எழுதினால்,மரணத்தையும், துக்கத்தையும்
குறிக்கின்றது.
சி.ரகுபதி.போரூர்.

2) சூடான விவாதம்
சிலர் வெற்றிலைப் பாக்கு கடையோரம்
சுற்றுச்சூழல் கேடு பற்றி
சூடாக விவாதித்தனர்
பாக்கினை மென்று துப்பிக் கொண்டும்
சிகரெட்டை ஊதித் தள்ளிக் கொண்டும். . .!
வாணி ராஜன்,சென்னை-17

3) அ முதல் ஒள வரை. . .!
அழகாகத் தமிழ் பேசு
ஆனந்தமாய் உழைத்து வாழு
இனிமையாய்ப் பேசிப் பழகு
ஈவதில் இன்பம் தேடு
உற்சாகம் செயலில் காட்டு
ஊராரிடம் அன்பைக் கொட்டு
எளிமையாய் வாழ்ந்து காட்டு
ஏழையை மதித்து முன்னேற்று
ஐயமதை விலக்கித் தள்ளு
ஒற்றுமையை உயிராய்க் கொள்
ஓர் முறைதான் மரணம் என்றென்னு
ஒளவ்வை மொழியை உயிராய் என்னு. . .!
வ.வெற்றிசெல்வி,வேதாரண்யம்

நன்றி; தினத்தந்தி இளைஞர் மலர் 31-5-08

உன் வீட்டு நாள் காட்டியில். . .

நாமிருவரும் ஒன்றாகவே
பள்ளியில் படித்தோம்
நீயென்னவோ புத்திசாலியாய் இருக்கிறாய்
அதே போல்
காதலையும் ஒன்றாகவே படித்தோம்
நீயென்னவோ
முட்டாளிலும் முட்டாளாய் இருக்கிறாய்

ஒரிரு நாளில்
வருகிறேனென சென்ற நீ
இரு வாரம் கழித்து வருகிறாய்
உன் வீட்டு நாள் காட்டியில்
ஒரு நாள் என்றால் ஒரு வாரமா ?

நன்றி; கவிஞர் மு.குணசேகரன் ( ப்ளாஸ்டிக் இரவுகள் )

நெளியும் நாணல்

1) நீர்க் குடத்துடன்
நடையில் அவள்
நெளியும் நாணல்!

2) யானைக்கும்
அடி சறுக்கும்
சூரியனுக்கு கிரகணம்.

3) காக்கை கூடு
குயிலுக்கு
அரசுத் தொட்டில்!

4)அரசியல் கட்சிகள் எடுத்தது
மக்கள் தொகை கணக்கு ;
வகுப்பு!

5)பிள்ளைகளுக்கு இனி
சூட்ட முடியாத பெயர்
காவிரி, காவேரி.

6)பயங்கரமான முன்னேற்றம்
கடவுள் படைக்க மனிதன்
கோவிலுக்குள் துப்பாக்கியுடன்.

7)வலது கால் வைத்து வா
மண முறிவில் திரும்ப
எந்தக் கால்.

8)அவளோடு
நெருங்கி அமர
பனிப்புல் சுகம்.

9) ஒரு நெல் மணி
ஜோசியக் கிளிக்கு
உழைப்பிற்கேற்ற கூலி.

10) தாவுகிறது
மரத்திற்கு மரம்
பாலம் கட்டிய குரங்கு.

நன்றி ; கவிஞர் டி.ராஜேந்திரன் (சிவந்த ரேகை )

இந்தியா

இயற்கை வளங்களில்
ஜப்பான் ஊனம்

மனித வளத்தில்
வளைகுடா ஊனம்

சமுதாயக் கடமைகளில்
இந்தியா ஊனம்

இந்தியக் குடியரசு சட்டங்களை
அதன் ஓட்டைகள் வழியே
அழித்து வரும்
இந்தியர்களே !

இந்தியாவில் பிரச்சனை
அறியாமையால் அல்ல
ஆக்கமும்
செயலும்
அறியாமையில்தான்.

நன்றி; என்.சுரேஷ் ( எண்ணங்களின் ஊர்வலம் )

மீறல்

அழுத்தி அழுத்தி சீவினாலும் படியாமல்
நெற்றியில் விழுகிறது கற்றை முடி.
பார்த்துப் பார்த்து போட்டாலும்
டீச்சரின் கோட்டை விட்டு
விலகிப் போகிறது பையனின் 'ஆனா'.

தேடித் தேடி நடந்தாலும் பாதச்சுவட்டை விட்டு
தவறிப் போகிறது நடை.
எப்படித்தான் அலசினாலும் எங்காவது ஓரிடத்தில்
அதிகமாய் போய்விடுகிறது சட்டையில் நீலம்
அறைக்குள் வைத்தே வளர்த்தாலும்
ஜன்னலுக்கு வெளியே தலை சீட்டிச்
சிரிக்கிறது பூ !

ஒரே மாதிரி டிக் டிக் கேட்டு
வாழ்க்கை நகரவேண்டுமென
ஏன் நினைக்கிறாய் ?

நன்றி ; கவிஞர் ஜீவி (நைலான் ஊஞ்சல்)
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது